உக்ரைனுக்கு மேலும் 1.80 பில்லியன் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா, பைடனுடன் ஜெலன்ஸ்கி சந்திப்பு
21 Dec,2022
உக்ரைனுக்கு மேலும் 1.80 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது. அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகளும் இதில் அடக்கம். மேலும் படிக்க வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்
ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு அதிநவீன பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். வாஷிங்டன்: உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில்,
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றடைந்தார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். இது நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு குறித்தும், ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு ஜெலன்ஸ்கியின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.