இந்த பழைய ஆயுதங்கள் நவீன மற்றும் வழக்கமான ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி உடனடி தாக்குதல்களில் இருந்து உக்ரைனை பாதுகாக்கும் இராணுவத்தை திசைதிருப்ப பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய ரஷ்ய - உக்ரைன் போர் 10 மாதங்கள் தாண்டி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. எல்லைப்பகுதியில் தொடங்கிய தாக்குதல், தலைநகரம் , முக்கிய நகரங்கள் என்று அனைத்துப் பகுதிகளிலும் தாக்குதல் நடந்து வருகிறது.
துப்பாக்கி, வெடிகுண்டு, ஏவுகணை என்று அனைத்து விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தும் ரஷ்யா 1970களில் சோவியத்ரஷ்யாவின் பகுதியாக இருந்த உக்ரைன் தயாரித்த ஏவுகணைகளை இப்போது அதற்கு எதிராகவே பயன்படுத்தி வருவதாக ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஆயுதங்கள் எப்படி ரஷ்யாவிடம் போனது என்று சிந்திக்கிறீர்களா? 1990 இல் சோவியத் ரஷ்யா உடைந்து சிறி சிறு நாடுகளாக மாறும் போது அன்றைக்கு உலகின் மூன்றாவது பெரிய நாடக இருந்த ரஷியாவுடன் பிரிந்த நாடுகள் புடாபெஸ்ட் மெமோராண்டம் எனப்படும் ஒப்பந்தம் போட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஈடாக அனைத்து அணு ஆயுதங்களையும் ரஷ்யாவிடம் கொடுக்க உக்ரைன் ஒப்புக்கொண்டது.
அதன்படி நிலத்தில் இருந்து நிலத்திற்கு ஏவும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், Tu-160 மற்றும் Tu-95 , Kh-55 சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணை, போன்றவை ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டன என்று உக்ரைனின் துணை உளவுத்துறை தலைவர் ஜெனரல் வாடிம் ஸ்கிபிட்ஸ்கி கூறினார்.
"ரஷ்ய இராணுவம் உக்ரைன் போரில் உலக அளவில் பெரிய சவாலை எதிர்கொள்கிறது. போர் காரணமாக அதன் ஆயுத வளங்கள் வேகமாக குறைந்து வருவதால், ரஷ்யா 1970 களில் முதலில் தயாரிக்கப்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய ஏவுகணைகளை இப்போது எங்களுக்கு எதிராகவே பயன்படுத்தி வருகின்றனர். இதை அப்போது ரஷ்யாவிடம் கொடுக்காமல் அமெரிக்காவிடம் கொடுத்திருக்க வேண்டும்" என்று உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் இந்த பழைய ஆயுதங்கள் நவீன மற்றும் வழக்கமான ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி உடனடி தாக்குதல்களில் இருந்து உக்ரைனை பாதுகாக்கும் இராணுவத்தை திசைதிருப்ப பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது உக்ரைனில் தயாரிக்கப்பட்டது என்பதை மறைக்க முயற்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தெற்கு பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிளின்ட்ஸியின் ரஷ்ய கவர்னர், உக்ரைனால் ஒரே இரவில் அந்த நகரம் ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது என்றும், உயிரிழப்பு அல்லது சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறினார். கிளின்ட்ஸி என்பது உக்ரேனிய எல்லையில் இருந்து சுமார் 45 கிமீ (28 மைல்) தொலைவில் உள்ள சுமார் 60,000 மக்கள் வசிக்கும் நகரம்.