ஐரோப்பிய ஒன்றிய எல்லையற்ற மண்டலத்தில் ருமேனியா- பல்கேரியாவை ஏற்க மறுப்பு!
09 Dec,2022
ஐரோப்பிய ஒன்றிய எல்லையற்ற மண்டலத்தில் ருமேனியா- பல்கேரியா ஆகிய நாடுகள் இணைய விடுக்கப்பட்ட அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள், குரோஷியாவை 26-நாடுகள், எல்லையற்ற ஷெங்கன் மண்டலத்தில் ஏற்றுக்கொள்வதற்கு வாக்களித்துள்ளனர்.
ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர், இது ஐரோப்பாவிற்கு ஒரு மோசமான நாள் என்று கூறினார்.
420 மில்லியன் மக்களை உள்ளடக்கிய மண்டலத்தில் இணைவதற்கு தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்வதாக ஐரோப்பிய ஆணையம் மூன்று நாடுகளையும் ஆதரித்தது.
‘நானும் ஏமாற்றமடைந்துள்ளேன்’ என்று ஐரோப்பிய ஒன்றிய உள்துறை ஆணையர் யில்வா ஜோஹன்சன் கூறினார்.
குரோஷியா 2013இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது. ருமேனியாவும் பல்கேரியாவும் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உறுப்பு நாடுகளாக ஆயின.
குரோஷியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் இந்த முடிவைப் பாராட்டினார். அதாவது குரோஷியா ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்டை நாடுகளான ஸ்லோவேனியா மற்றும் ஹங்கேரியுடன் அதன் எல்லைக் கடப்புகளை ஜனவரி 1ஆம் திகதி யூரோவுடன் இணைக்கும் அதே நாளில் நீக்கும்.
ஷெங்கன் மண்டலம், 1985இல் உருவாக்கப்பட்டது, ஷெங்கன் பகுதி மக்களை பொதுவாக பயண அல்லது சுங்க ஆவணங்களை காட்டாமல் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கிறது மற்றும் பொருட்களை சுதந்திரமாக கொண்டுச்செல்லலாம்.
இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 மாநிலங்களில் 22 மற்றும் நோர்வே, சுவிஸ்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகியவை அடங்கும்.