11.5B பில்லியன் பவுண்டுகளை கடனாக பெற்றுள்ள ரஷ்யா- உக்கிரைன் போருக்கு தேவை என அறிவிப்பு
22 Nov,2022
ரஷ்யா சுமார் 11.5 பில்லியன் பவுண்டுகளை கடனாகப் பெற்றுள்ளது. தனது நாட்டின் சொந்த பிணை முறிப்பு பத்திரங்களை(debt bonds) விற்பனை செய்து இந்த தொகையை ரஷ்ய அரசு பெற்றுள்ளதாக அன் நாட்டின் தேசிய பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த பெரும் தொகைப் பணம் , உக்கிரைன் போருக்கு பாவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவரைக்கும் ரஷ்யா இது போன்ற பிணை முறிப்பு பத்திரங்களை (debt bonds)இந்த அளவுக்கு விற்பனை செய்ததே இல்லை எனலாம்.
ரஷ்யா உக்கிரைன் நாட்டுடன் போர் தொடுத்து பல பின்னடைவுகளை அடைந்துள்ளது. பல நூறு டாங்கிகளை மற்றும் விமானங்களை இழந்து நிற்கிறது. இன் நிலையில் உக்கிரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்த, பெரும்தொகைப் பணம் தேவைப்படுகிறது. இதனால் இந்த பத்திரங்களை அது தற்காலிகமாக விற்றுள்ளது. ஆனால் இந்த அளவு காசைக் கொடுத்து யார் அந்தப் பத்திரங்களை வாங்கி இருப்பார்கள் ?
என்பது பெரும் கேள்விக் குறி. அமெரிக்க பினாமிகளே திரை மறைவில் இதனை வாங்கி இருக்கக் கூடும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.