புட்டினை சரணடையச் சொல்லும் கட்டளை- கேர்ஷோன் நகரையும் கைப்பற்றிய உக்கிரைன் படை
12 Nov,2022
உக்கிரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் விரல் விட்டு எண்ணக் கூடிய 4 நகரங்களை மட்டுமே ரஷ்யா தற்போது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதில் முக்கிய நகரமான கேர்ஷோனை, நேற்றைய தினம்(11) உக்கிரைன் படைகள் மீட்டுள்ளார்கள். இதனால் ரஷ்ய ராணுவம் பின்வாங்கி ஓடியுள்ளது. இது ரஷ்யாவுக்கு பெரும் இழப்பு என்று கூறப்படுகிறது. அது போக புட்டினை சரணடையுமாறு, உக்கிரைன் ராணுவம் கட்டளை பிறப்பித்து உள்ளது. ரஷ்யா போரில் தோற்றுவிட்டதாக உக்கிரைன் அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள எதிர்கட்சிகள் புட்டினை கடுமையாக சாடியுள்ளது. சரியான உளவுத் தகவல் மட்டும் திட்டமிடல் இல்லாமல் உக்கிரைன் மீது போர் தொடுத்து, ரஷ்யா பெரும் அழிவுகளை சந்தித்துள்ளதாக அன் நாட்டில் உள்ள தலைவர்கள் தற்போது ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். அது போக ரஷ்யாவின் டாங்கிப் படைகளில், பாதி அழிந்து விட்டது. இதனை ஈடு செய்ய ரஷ்யா பெரும் தொகைப் பணத்தை செலவிட வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும்..
ரஷ்ய ராணுவத்தில் 90,000 ஆயிரம் பேர் இறந்து இருக்கக் கூடும் என்றும். அது போல உக்கிரைன் படைகளில் 1 லட்சம் பேர் இறந்து இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதில் விவகாரம் என்னவென்றால், ரஷ்ய படைகளில் இணைந்து கொள்ள எவரும் தயாராக இல்லை. ஆனால் உக்கிரைனில் தமது நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல இளைஞர்கள் படைகளில் தொடர்ந்தும் இணைந்து வருகிறார்கள்.