ஹப்பர் சோனிக் ஏவுகணைய யதாரித்த ஈரான்
11 Nov,2022
ஹைப்பர் சோனிக் என்று அழைக்கப்படும், ஒலியை விட 5 மடங்கு வேகமாகச் செல்லக் கூடிய ஏவுகணைகளை தாயாரிப்பதில் ஈரான் வெற்றி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள், பூமியில் இருந்து புறப்பட்டு நேராக ஒரு இலக்கை தாக்காது. மாறாக அது விண்வெளி வரை பயணிக்கும். பின்னர் அங்கிருந்து செங்குத்தாக சென்று, தனது இலக்கை தாக்கி அழிக்கும். இதனால் ராடர்கள் இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை கண்டறியாது. மேலும் சொல்லப் போனால்ஸ
பல நாடுகள் வைத்திருக்கும் ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் கூட, இந்த வகையான ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை கண்டறிந்து தாக்கி அழிக்காது. குறித்த ஏவுகணையில் அணு குண்டை பொருத்தினால் போதும். பெரும் அழிவை அது ஏற்படுத்தும். அந்த வகையில், ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை தயாரிப்பதில் தாம் வெற்றி கண்டுள்ளதாக ஈரான் நாடு அறிவித்துள்ளது, பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. இது போன்ற ஏவுகணைகள் இந்தியாவிடம் கூட இல்லை. அதனால் ..
பெரிய பாதுகாப்பு ஓட்டை ஒன்று உருவாகியுள்ளதாக, அமெரிக்கா அஞ்சுகிறது. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிடம் தான் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் உள்ளது. இதில் முன்னோடிகள் பிரித்தானியா தான். சமீபத்தில் தான் ரஷ்யா இந்த ஏவுகணைகளை பரிசோதனை செய்து பார்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இந்த தொழில் நுட்ப்பத்தை ரஷ்யா தான், ஈரானுக்கு வழங்கியதா ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.