ரூ.100 மில்லியன்.. போலீசாரின் வங்கிக் கணக்கில் கொட்டிய பண மழை..!
07 Nov,2022
காவலர்கள் கணக்கில் கொட்டிய காசு மழைகாவலர்கள் கணக்கில் கொட்டிய காசு மழை
வங்கி என்னைத் தொடர்பு கொண்டு எனது கணக்கிற்கு 100 மில்லியன் ரூபாய் பணம் மாற்றப்பட்டதாகத் தெரிவித்தபோது தான் எனக்கு அது பற்றித் தெரிய வந்தது
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி, தெரியாத கணக்கிலிருந்து தனது வங்கிக் கணக்கில் 100 மில்லியன் பணத்தை பெற்றதால், ஒரே இரவில் கோடீஸ்வரரானார்.
கராச்சியின் பகதூராபாத் காவல்நிலையத்தில் உள்ள விசாரணை அதிகாரி அமீர் கோபங், தனது சம்பளம் உட்பட 100 மில்லியன் ரூபாய் தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். தனது கணக்கில் சில ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் இருந்ததில்லை. இப்பொது இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என்று குழம்பினார்.
“வங்கி என்னைத் தொடர்பு கொண்டு எனது கணக்கிற்கு 100 மில்லியன் ரூபாய் பணம் மாற்றப்பட்டதாகத் தெரிவித்தபோது தான் எனக்கு அது பற்றித் தெரிய வந்தது,” என்றார்.
இதேபோல், லர்கானா மற்றும் சுக்கூரில் உள்ள சில போலீஸ் அதிகாரிகளும் தங்கள் வங்கிக் கணக்குகளில் பெரும் தொகையைப் பெற்றுள்ளனர். லார்கானாவில், மூன்று போலீஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரும் தங்கள் கணக்குகளில் 50 மில்லியன் ரூபாய்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதே நேரத்தில் சுக்கூரில் ஒரு போலீஸ் அதிகாரி தனது கணக்கில் அதே தொகையை வைத்திருந்தார்.
அதன் பின்னர் பாக்கிட்தான் போலீஸ் நிர்வாகம் அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர். பணம் போடப்பட்டது குறித்து விசாரணைகளை நடைபெற்று வரும் நிலையில் அவர்களது ஏடிஎம் அட்டைகளையும் வங்கி முடக்கியுள்ளது.