உக்ரைனுக்கு ஏற்படவுள்ள பேரழிவு - மீளவே முடியாத மரண அடிகொடுக்கத் தயாராகும் ரஷ்யா:
03 Nov,2022
உக்ரைன் மீது பல மாதங்களாக போர் தொடுத்துள்ள ரஷ்யாவால் இது வரை உக்ரைனை முற்றுமுழுதாக கைப்பற்ற முடியாமல் போயுள்ளதால் விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றது.
இந்நிலையில், ரஷ்ய தளபதிகள் உக்ரைன் மீது அணு ஆயுதம் பயன்படுத்துவது தொடர்பில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த ஆலோசனைகளில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே ரஷ்யாவின் நகர்வுகளை துல்லியமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விளாடிமிர் புடினின் ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் தொடர்ந்து கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. இதனால் விரக்தியடைந்துள்ள ரஷ்ய தளபதிகள், உக்ரைனில் எங்கே எப்போது அணு ஆயுதம் பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் கூட்டு ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு கசிந்துள்ள தகவல் உண்மையாக இருக்கவே வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி, நாம் இந்த தகவலை உதாசீனப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவின் நகர்வுகளை துல்லியமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது ரஷ்யாவிடம் மொத்தம் 6,000 அணு ஆயுதங்களின் குவியல் இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதனால் உலகம் மொத்தமும் 200 முதல் 300 மில்லியன் மக்கள் பாதிப்படையலாம் என கூறுகின்றனர். மேலும், போருக்கு பயன்படுத்தக்கூடிய 2,000 அணு ஆயுதங்களையும் ரஷ்யா உருவாக்கி வைத்துள்ளது.
இப்படியான அணு ஆயுதத்தில் மிக சிறிய ஒன்றை பயன்படுத்தினாலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதுடன், பல ஆண்டுகளுக்கு அப்பகுதி வாழ முடியாததாகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துமானால், அது கடந்த 70 ஆண்டுகளில் முதன்முறை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.