உக்கிரைன் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!ஸ
31 Oct,2022
உக்கிரைன் நாட்டின் மீது ஏவுகணைகளை ஏவ, ரஷ்யாவால் இனி முடியாது. காரணம் ஒவ்வொரு ஏவுகணையும் பல மில்லியன் டாலர்கள் பெறுமதியானவை. இதனால் சிறிது காலம் தாக்குதலை தள்ளி வைத்து இருந்தது ரஷ்யா. ஆனால் ஈரான் நாட்டு தயாரிப்பான, தற்கொலை ட்ரோன்கள் மிக மிக மலிவான விலையில் கிடைக்கிறது. இது போக 600KM வரை சென்று தாக்க வல்லது. இதனால் ரஷ்யா ஈரான் தயாரிப்பான தற்கொலை ட்ரோன்களை வாங்கி,
அதனை உக்கிரைன் நாட்டின் மீது ஏவி வருகிறது. மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த 12 அடி நீளமான ட்ரோன்கள், சுமார் 40 KG வெடி குண்டை தாங்கிச் சென்று வெடிக்க வல்லவை. அத்தோடு பெரும் ஆபத்தை ஏற்படுத்தவும் வல்லவை. இதில் உள்ள கமரா மூலம், விமான எங்கே செல்கிறது என்று பார்க்க முடியும். இதனால் இந்த விமானத்தை செலுத்துவதும் இலகு.
இந்த விமானத்தை பாவித்து உக்கிரைனில் உள்ள மக்கள் குடியிருப்பு மீதும், மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால் தற்போது அமெரிக்கா கொடுத்துள்ள அதி நவீன, கருவி ஒன்று, இந்த விமானங்களை செயல் இழக்கச் செய்து தரையிறக்க வைக்கும் வல்லமை கொண்டது. இதனைப் பாவித்து நூற்றுக் கணக்கான ரஷ்ய ட்ரோன்களை உக்கிரைன் தற்போது கைப்பற்றி வருகிறது.