இந்தியாவுக்கு போகும்போது அதிக எச்சரிக்கையுடன் இருங்க... அமெரிக்கா வேண்டுகோள்
07 Oct,2022
பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் சுற்றுலாத் தலங்களிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன. ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது. மேலும் படிக்க வாஷிங்டன்: வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்க மக்களுக்கு அமெரிக்க அரசு அவ்வப்போது பயண ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
அவ்வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புதிய பயண ஆலோசனையில் இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. குற்றச் செயல்கள் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்த ஆலோசனை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகர் லே தவிர ஜம்மு மற்றும்
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்று கற்பழிப்பு என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்கள் சுற்றுலாத் தலங்களிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன. சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் அரசு அலுவலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் சிறிய அளவிலோ அல்லது திடீரென்றோ தாக்குதல் நடத்தலாம் என்றும் பயண ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.