படு தோல்வியை சந்தித்து வரும் புட்டின் போற போக்கில் அணு குண்டை பாவிக்க கூடும்
06 Oct,2022
ரஷ்யா கைப்பற்றி வைத்திருந்த உக்கிரைனின், 4 மிகப் பெரிய நகரங்களை, தமது நாட்டோடு இணைப்பதாகவும். அதன் மீது தாக்குதல் நடத்தினால் ரஷ்ய மண் மீது தாக்குதல் நடத்தியற்கு சமன் என்று கூறினார் புட்டின். இதனூடாக ஒரு பயத்தை உண்டாக்க அவர் முனைந்தார். ஆனால் இதனை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாத உக்கிரைன், ரஷ்ய அதிபர் இதனை அறிவித்த சில மணி நேரங்களில் கடும் தாக்குதலை தொடுத்து, அந்த 4 நகரத்திற்கு ஆயுதங்கள் செல்லும் முக்கிய பாதையைக் கைப்பற்றி , நிலைகொண்டுள்ள 5,000 ரஷ்ய துருப்புகளை ஊடறுப்புச் செய்தார்கள். இன் நிலையில்..
மேற்க்கு உலக நாடுகள் பல அதி நவீன ஆயுதங்களை அள்ளி வழங்கி வரும் நிலையில். இவை அனைத்தையும் பாவிக்க கற்றுக் கொண்டு விட்டார்கள் உக்கிரைன் ராணுவத்தினர். இது போக தற்போது பிரித்தானியா கொடுத்துள்ள அதி நவீன ஏவுகணைகளை கொண்டு ரஷ்ய நிலைகள் மீது துல்லியமாக தாக்கி வருகிறார்கள் உக்கிரைன் படைகள். இதனால் நிலை தடுமாறி, பல பின்னடைவை ரஷ்ய துருப்புகள் சந்தித்து வருகிறது. 6 வருடங்களுக்கு முன்னர் உக்கிரைன் நாட்டின் பெரும் பகுதியான கிரீமியாவை, ரஷ்யா திடீரென தனது நாட்டின் ஒரு பாகமாக அறிவித்து, அங்கே தனது படைகளை நிறுத்தியது. ஆனால் போற போக்கில் கிரீமையாவை கூட உக்கிரைன் மீட்டு விடும் போல உள்ளது. நாளுக்கு நாள்ஸ
படு தோல்வியை சந்தித்து வரும் புட்டின், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து உக்கிரைன் மீது அணு குண்டு தாக்குதலை நடத்தக் கூடும் என்ற தகவலை அமெரிக்கா ஏற்கனவே உக்கிரைன் அதிபருக்கு வழங்கியுள்ளது.