46 பேருடன் மாயமான இலங்கையரின் படகு ரீயூனியன் தீவில் சிக்கியது!
18 Sep,2022
46 பேருடன் பல மாதங்களாக காணாமல் போயிருந்த தஹாமி துவா என்ற படகு பிரான்ஸ்- ரீயூனியன் தீவின் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 21ம் திகதி இந்த மீன்பிடி படகு புறப்பட்டதாக கூறப்படுகிறது. ஹலவத்த - அம்பகண்டவில பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரினால் இந்த கப்பல் ஓட்டிச் செல்லப்பட்டுள்ளது.
அதன் பின்னர், ஆழ்கடலில் உள்ள கப்பலுடன் மற்றொரு குழு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒருசில பெண்களும் சிறு குழந்தைகளும் அக்குழுவில் இருந்தனர். சர்வதேச கடலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த படகு கடலில் மிதந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அங்கு கடலில் சென்று கொண்டிருந்த மற்றொரு கப்பலின் குழுவால் ஆகஸ்ட் 16ம் திகதி கப்பல் மீட்கப்பட்டு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது.
குறித்த படகு மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கூறப்பட நிலையில் அந்த படகு நேற்று மீண்டும் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் , 46 பேரை ஏற்றிச் செல்லும் அந்த கப்பல் தற்போது ரீயூனியன் தீவின் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ரீயூனியன் தீவு பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத் தொலைவில் இருந்தாலும், ரீயூனியன் தீவு பிரான்ஸின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது