உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியது
15 Sep,2022
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
கடந்த 6 மாத காலமாக ரஷ்ய படையினர் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷ்யா பல்வேறு நகரங்களை கைப்பற்றியது. இதில் கார்கிவில் உள்ள இஷீயும் நகரை மீட்ட ராணுவ படையினரை சந்தித்து வீடு திரும்புகையில் எதிரே வந்த கார் இவர் கார் மீது மோதியது. இதில் செலன்ஸ்கி கார் , பாதுகாப்பு வாகனமும் சேதமுற்றது. விபத்து குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.