பின்னடைவுக்கு பழிவாங்கிய ரஷ்ய ராணுவம்..இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்
12 Sep,2022
இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்
தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ரஷ்ய ராணுவம் கிழக்கு உக்ரைன் பகுதியில் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். போர் தொடங்கி எட்டு மாதங்கள் ஆன நிலையில், தற்போது போரில் முக்கிய நகர்வாக ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்து உக்ரைனின் நகரப்பகுதிகளை உக்ரைன் நாட்டு படையினர் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கிவ் மற்றும் கீவ் ஆகிய நகரங்களின் பெரும்பாலான பகுதிகளின் கட்டுப்பாட்டை உக்ரைன் ராணுவத்தினர் மீண்டும் தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர்.
செப்டம்பர் மாத ராணுவ நடவடிக்கை மூலம் உக்ரைன் ராணுவம் சுமார் 3,000 கிமீ பகுதியை மீட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் இந்த பதில் நடவடிக்கை காரணமாக சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து ரஷ்ய ராணுவம் பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவை ரஷ்ய படையினர் தங்களுக்கு நேர்ந்த அவமானமாக நினைத்த நிலையில், உக்ரைனை பழித்தீர்க்கும் விதமாக உக்ரைன் நாட்டின் மின் நிலையங்கள் மீது ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தினர்.
இதன் காரணமாக உக்ரைனின் கிழக்குப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளன. உக்ரைனின் எதி ர்தாக்குதலை ராணுவ ரீதியாக எதிர்கொள்ளாமல் பொது மக்களை குறிவைத்து இது போன்ற அத்தியாவசிய அம்சங்கள் மீது தாக்குதல் நடத்துவது முறையல்ல என உக்ரைன் அதிபர் விளாதிமோர் செலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். பழிவாங்கும் நோக்கில் இது போன்று மோசமான நடவடிக்கைகளை ரஷ்யா செய்கிறது என உக்ரைன் தரப்பு புகார் தெரிவித்துள்ளது. ரஷ்யாவோ நாங்கள் திட்டமிட்டு இது போன்று தாக்குதல் நடத்தவில்லை என குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
சுமார் 150 நகரங்கள் இருளில் மூழ்கிய நிலையில் எப்போது மின் இணைப்பு சீராகும் என பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதேவேளை, போரில் இழந்த பகுதிகளை மீண்டும் மீட்கும் விதத்தில் தொடர்ந்து உக்ரைன் ராணுவம் முன்னேறு தாக்குதல் நடத்துவோம் என அறிவித்துள்ளது.