கனடாவில் 10 பேரை பலி கொண்ட கத்திக்குத்து தாக்குதலின் 2-வது கொலையாளியும் பலி
08 Sep,2022
மைல்ஸ் சாண்டர்சன் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார். மைல்ஸ் சாண்டர்சன் கடந்த பிப்ரவரி மாதம் ஜெயிலில் இருந்து பரோலில் வெளியில் வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் சஸ்காட் செவன் மாகாணத்தில்
பொதுமக்கள் மீது சகோதரர்களான டேமியன் சாண்டர்சன், மைல்ஸ் சாண்டர்சன் கத்திக்குத்து நடத்தினர். இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயம் அடைந்தனர். தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில் டேமியன் சாண்டர்சன், அப்பகுதியில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. தலைமறைவாக இருந்த மைல்ஸ் சாண்டர்சனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். மைல்ஸ் சாண்டர்சன் சஸ்கட்செவனில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு காரை திருடி சென்று தப்பி சென்றபோது போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். அவரது உடலில் ஏராளமான காயங்கள் இருந்தது. இதையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ரோண்டா பிளாக்மோர் கூறும்போது, மைல்ஸ் சாண்டர்சன் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்.
உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். அவர் தனக்கு தானே சுயமாக காயங்களை ஏற்படுத்தி கொண்டுள்ளார். இதனால் அவர் உயிரிழந்தார் என்றனர். டேமியன் மற்றும் மைல்ஸ் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதில் மைல்ஸ் சாண்டர்சன் கடந்த பிப்ரவரி மாதம் ஜெயிலில் இருந்து பரோலில் வெளியில் வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.