உக்ரைன் அணுமின் நிலையம் பாதுகாப்பு வலையமாக அறிவிப்பு
08 Sep,2022
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வலயத்தை நிறுவுவதற்கு சர்வதேச அணுசக்தி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த வாரம் ஆலைக்கு கண்காணிப்பு குழுவை அனுப்பி ஆய்வு செய்த குறித்த அமைப்பு, தற்போதைய நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறியுள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் ஆக்கிரமிப்பு அணுசக்தி பேரழிவு பற்றிய அச்சத்தைத் தூண்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் சபோரிஜியா அணுமின் நிலையம் பாதுகாப்பு வலயம் என சர்வதேச அணுசக்தி அமைப்பு அறிவித்துள்ள நிலையில் அதனை உக்ரேனிய ஜனாதிபதி வரவேற்றுள்ளார்.
போரின் தொடக்கத்தில் இருந்து ரஷ்யாவால் ஆக்கிரப்பில் உள்ள குறித்த ஆலையில் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜயத்தைத் தொடர்ந்து, ஷெல் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா. உத்தரவிட்டது.
எனவே அணுமின் நிலையத்தின் பிரதேசத்தை இராணுவமயமாக்கும் நோக்கத்தில் பாதுகாப்பு வலயம் என அறிவித்தமையை ஆதரிப்பதாக உக்ரேனிய ஜனாதிபதி கூறியுள்ளார்.