உக்ரைனை வீழ்த்த வட கொரியாவுடன் கைக்கோர்த்த ரஷ்யா!
06 Sep,2022
அமெரிக்க உளவுத்துறையின் தகவல்படி, உக்ரைனில் நடந்து வரும் சண்டைக்காக வட கொரியாவிடம் இருந்து மில்லியன் கணக்கான ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வாங்கும் பணியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரஷ்யா வட கொரியா பக்கம் திரும்புவது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் பெயர் குறிப்பிடாத அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் தகவல்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய இராணுவம் உக்ரைனில் தொடர்ந்து கடுமையான விநியோக பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யர்கள் எதிர்காலத்தில் கூடுதல் வட கொரிய இராணுவ உபகரணங்களை வாங்கலாம் என்று நம்புகிறார்கள்.
இது குறித்த உளவுத்துறை தகவல் முதன்முதலில் சர்வதேச பத்திரிகையால் அறிவிக்கப்பட்டது. உக்ரைனில் போர்க்களத்தில் பயன்படுத்த ஈரானால் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ஆகஸ்ட் மாதம் ரஷ்ய இராணுவம் வழங்கியதை பைடன்(Joe biden) நிர்வாகம் சமீபத்தில் உறுதிப்படுத்திய பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுடனான போரில் பயன்படுத்துவதற்காக ஆகஸ்ட் மாதம் தெஹ்ரானில் இருந்து வாங்கிய ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களில் தொழில்நுட்ப சிக்கல்களை ரஷ்யா எதிர்கொண்டதாக வெள்ளை மாளிகை கடந்த வாரம் கூறியது.