உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 150-வது நாளை நெருங்கி வருகிறது. இந்த போர் உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரினால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ரஷியா 3000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நகரங்கள் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன ரஷிய படைகள்.
இந்நிலையில், உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில், ரஷியா 3000-க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.
குரூஸ் ஏவுகணைகள், வான் மேற்பரப்பு ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள், பாஸ்டன் கடலோர அமைப்பின் ஓனிக்ஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தின.
கப்பல் கட்டும் தளம் உள்பட தொழில்துறை கட்டமைப்புகள், பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியாக ஏவுகணைகள் வீசப்பட்டன என தெரிவித்துள்ளது.
தெற்கு உக்ரைன் நகரம் மீது ரஷிய ராணுவம் சரமாரி ஏவுகணை வீச்சில் ஈடுபட்டது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த ரஷியா உச்சக்கட்ட போர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் கிழக்கு உக்ரைனில் அரசு படைகள் வசம் உள்ள நகரங்கள் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன ரஷிய படைகள்.
இதனிடையே போர் தொடங்கிய சமயத்தில் தெற்கு உக்ரைனில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவிற்கும் அந்த நாட்டின் முக்கிய துறைமுகமான ஒடேசாவிற்கும் இடையே கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மைகோலைவ் நகரை கைப்பற்ற ரஷியா ராணுவம் தீவிரமாக முயிற்சித்தது.
ஆனால் அப்போது உக்ரைன் படைகள் அதை முறியடித்தன. இந்த நிலையில் மைகோலைவ் நகரை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ரஷ்யா மீண்டும் இறங்கியுள்ளன.
அந்த வகையில் நேற்று மைகோலைவ் நகர் மீது ரஷிய படைகள் சரமரியான தாக்குதல்களை தொடுத்தன. அந்த நகரில் உள்ள மிகப்பெரிய கப்பல் கட்டும் தளம் உள்பட தொழில்துறை கட்டமைப்புகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியாக ஏவுகணைகள் வீசப்பட்டன. எனினும் இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிர் சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.