டேமீ- நேட்டர் ஸ்டல் ரோபோக்களை உக்கிரைனுக்கு கொடுத்த அமெரிக்கா
21 Jun,2022
- ரஷ்ய துருப்புகளுக்கு பெரும் சவால் !
ஓசை எழுப்பாமல் தரையில் ஊர்ந்து சென்று, எதிரிகளை அடையாளம் கண்டு பிடித்து தாமே முடிவை எடுத்து சுடும் சிறிய ரோபோக்களை அமெரிக்கா உக்கிரைனுக்கு வழங்கியுள்ளது. 7.62 இஞ்சி துப்பாக்கி இதில் பொருத்தப்பட்டுள்ளதோடு ஏகே 47 ரக துப்பாக்கிக்கு இணையான மேலதிக சிறிய துப்பாக்கி ஒன்றும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை ரிமோட் கன்றோலர் மூலம் , இயக்க முடியும். இல்லையேட் ஆட்டோ பைலட் முறையில், தானாக இயங்க வைக்கவும் முடியும். மிக மிக ஆபத்தான இந்த ரோபோக்கள் உக்கிரைன் மண்ணில் நடமாட உள்ளது.
15 ஆயிரம் கோடீஸ்வரர்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறுகிறார்கள்- பிரிட்டன் உளவு தகவல் இது !
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய ராணுவ படை வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இரு நாட்டின் வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி வருகின்றன. இந்த போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், தங்களை பாதுகாத்து கொள்ளவும் ரஷ்யாவில் இருந்து பல்வேறு பெரிய நிறுவனங்களும் வெளியேறியுள்ளன. இந்த போரானது நீண்டகாலத்திற்கு தொடர கூடிய சூழல் நிலவியுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் பணக்கார பிரமுகர்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேற கூடிய சூழலால், அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது போரால் ஏற்படும் நீண்டகால சேதம் இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதற்கான விண்ணப்பங்களிலிருந்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் முன்பே அந்நாட்டில் இருந்து கிளம்ப முயற்சித்துள்ளனர் என தெரியவந்துள்ளது” என்று இங்கிலாந்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புட்டினை மேலும் கடுப்பேத்தும் உக்கிரைன் அதிபரின் துணிவு !
ரஷ்யா சண்டையை மேலும் தீவிரப்படுத்த இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ரஷ்யா-உக்ரைன் போர் தடை இன்றி தொடர்ந்து 117-வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனின் தொழில் துறை டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷ்யா முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைனின் கிழக்குப்பகுதிகள் சென்ற பல வாரங்களாக கடுமையான போர் தாக்குதல்களால் உலுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியிருப்பதாவது “இந்த வாரம் ரஷ்யா போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் என நாங்கள் வெளிப்படையாக எதிர்பார்க்கிறோம்.
அதற்கென நாங்கள் தயாராகி வருகிறோம். கிழக்குப்பகுதியில் ரஷ்ய படைகளின் புது தாக்குதல்களை உக்ரைன் முறியடித்தது. நாங்கள் தெற்கு உக்ரைன் பகுதியை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களுடையது அனைத்தையும் நாங்கள் திருப்பி பெறுவோம். கருங்கடல் உக்ரைனியர்களுக்கு உடையதாகவும், பாதுகாப்பாகவும் மாறும். நமது ராணுவம் காத்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக சேருவதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்காக உக்ரைன் காத்துகொண்டிருக்கிறது.