ரஷ்யாவுக்கு மற்றுமொரு பலத்த அடி - ஆயுதக் கப்பல் கடலில் மூழ்கியது.
20 Jun,2022
உக்ரைனில் அண்மையில் ரஷ்யா கைப்பற்றிய பாம்பு தீவிற்கு ஆயுதங்களை கொண்டு சென்ற ரஷ்ய கப்பல் மீது உக்ரைன் படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தி அதனை சிதறடித்துள்ளனர்.
அமெரிக்காவின் Harpoon ஏவுகணைகளை கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ரஷ்ய கப்பல் கடலில் மூழ்கியது.
இது தொடர்பான வீடியோவை உக்ரைன் கடற்படையினர் வெளியிட்டுள்ளனர். ட்ரோன் கமரா மூலம் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
1977 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை சேவையில் Harpoon ஏவுகணைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து, Harpoon ஏவுகணை மேற்கத்திய கப்பல் எதிர்ப்பு ஆயுதமாக மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.