மர்ம விமானம் வெடிகுண்டு தாரிகளோடு அமெரிக்காவுக்கு அருகே தரை இறங்கிய மாயம்
18 Jun,2022
ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து, இலக்க குறியீடு எதுவும் இல்லாமல் ஒரு விமானம் புறப்பட்டு, ஈரான் நாட்டை அடைந்து. பின்னர் அங்கிருந்து பெல்கிரேட் வழியாக வெனிசுலா நாட்டை அடைந்துள்ளது. இந்த விமானத்தில் யார் பயணித்தார்கள் என்பது இதுவரை வெளியாகவில்லை. இது பயணிகள் விமானமும் இல்லை. சொல்லப் போனால் ராணுவ விமானமும் இல்லை. தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் இந்த விமானம் தரையிறங்கியுள்ளது என அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் வெடிகுண்டு தாரிகள் பயணித்து இருக்க கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது. மொஸ்கோவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், ஈரானின் தலை நகர் தெகிரானில் இறங்கியவேளை, அதில் தற்கொலை வெடிகுண்டு தாரிகள் ஏறி இருக்கலாம் என்றும்.
அமெரிக்காவுக்கு அருகில் உள்ள நாட்டில் விமானத்தை இறக்கி. பின்னர் தரை வழியாக அமெரிக்காவுக்குள் அவர்களை ஊடுவச் செய்ய ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கூட்டாக சதி செய்து உள்ளதாக சி.ஐ.ஏ கருதுகிறது. இதனை அடுத்து எல்லைப் பாதுகாப்பை அமெரிக்கா உஷார் படுத்தியுள்ளததோடு. அமெரிக்காவில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக சி.ஐ.ஏ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.