போர் தொடங்கியது முதல் உக்ரைன் மீது 2,100 ஏவுகணைகளை ஏவிய ரஷியா
09 Jun,2022
போர் தொடங்கியது முதல் உக்ரைன் மீது 2 ஆயிரத்து 100 ஏவுகணைகளை ரஷியா ஏவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ், உக்ரைன் மீது ரஷியா 106-வது நாளாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதன் காரணமாக உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், போர் தொடங்கியது முதல் உக்ரைன் மீது 2 ஆயிரத்து 100 ஏவுகணைகளை ரஷியா ஏவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைஸ்கார்ட் என்ற அமைப்பு சேரித்த தகவல்களின் அடிப்படையில் உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல்களின் விவரம் வெளியாகியுள்ளது. இதில், 600 ஆயிரத்திற்கும் அதிகமான ஏவுகணைகள் பெலாரசில் இருந்து உக்ரைன் மீது ஏவப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.