அதிநவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி - ரஷியா அதிரடி
29 May,2022
1,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ரஷியா வெற்றிகரமாக சோதித்தது.
29 மே 2022 5:05 PM செர்பிய அதிபருடன் ரஷிய அதிபர் புதின் பேச்சு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், செர்பிய அதிபர் அலெக்ஸ்டாண்ட வுகிக்- உடன் தொலைபேசி வாயிலாக இன்று பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது செர்பியாவுக்கு இயற்கை எரிவாயுவை ரஷியா தொடர்ந்து வழங்கும் என்று புதின் உறுதி அளித்தார். 29 மே 2022 11:53 AM "நிலைமை ரொம்ப மோசமா இருக்கு" - உச்சபட்ச வேதனையில் உக்ரைன் அதிபர் கிழக்கு உக்ரைனில் நிலைமை சொல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். கிழக்கு பிராந்தியத்தை கைப்பற்றும் பொருட்டு ரஷிய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் இது குறித்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஆயுத விநியோகத்தை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், வட கிழக்கு சுமி பகுதியில் ரஷியாவின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலை கண்டிப்பதாகவும் தெரிவித்தார். 29 மே 2022 10:33 AM உக்ரைனின் சுமி மாகாணத்தில் எல்லைக் காவலர்கள் மீது ரஷிய ராணுவம் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. மேலும் கிட்டத்தட்ட 20 இடங்களில் குண்டுவெடிப்புகளும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷிய எல்லைக்கு அருகிலுள்ள போயாரோ-லெசாச்சி கிராமத்தை நோக்கி ரஷிய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பணியாளர்கள் அல்லது உபகரணங்களுக்கு எந்த இழப்பும் இல்லை என்றும் உக்ரைனின் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன. 29 மே 2022 9:39 AM இங்கிலாந்து பிரதமருடன் பாதுகாப்பு ஆதரவு குறித்து உக்ரைன் அதிபர் ஆலோசனை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடனான தொலைபேசி உரையாடலில் உக்ரைனுக்கான பாதுகாப்பு ஆதரவு குறித்து ஆலோசித்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கான பாதுகாப்பு ஆதரவை வலுப்படுத்துவது, பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து நாங்கள் பேசினோம் என்றும், எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் உக்ரேனுக்கு எரிபொருளை வழங்குவது தொடர்பான பிரச்சினை குறித்தும் நாங்கள் ஆலோசனை நடத்தினோம் என்றும் உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 மே 2022 8:47 AM உக்ரைன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஹோவிட்சர்களைப் பெறுகிறது - பாதுகாப்பு அமைச்சர் தகவல் டென்மார்க்கிலிருந்து ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளையும், அமெரிக்காவிடமிருந்து சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர்களையும் உக்ரைன் பெறத் தொடங்கியுள்ளது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் இன்று தெரிவித்தார், மேலும் நமது நாட்டின் கடலோரப் பாதுகாப்பு ஹார்பூன் ஏவுகணைகளால் மட்டும் பலப்படுத்தப்படாது - அவை பயிற்சி பெற்ற உக்ரேனிய அணிகளால் பயன்படுத்தப்படும் என்றும் இந்த ஆயுதங்கள் ரஷியாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடும் படைகளை வலுப்படுத்தும் என்றும் ரெஸ்னிகோவ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 29 மே 2022 7:51 AM உக்ரைன் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான உதவிகளை வழங்க நட்பு நாடுகள் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆயுத விநியோகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்கள் எதிரியை விட அதிகமாக பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 29 மே 2022 6:58 AM கிழக்கு உக்ரைனில் உக்கிர போர் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் இப்போது கிட்டத்தட்ட கிழக்கு உக்ரைன் மீதான போராக மாறி இருக்கிறது. கிழக்கு உக்ரைனின் வரலாற்று, கலாசார, பொருளாதார பிராந்தியமாக திகழ்ந்து வருவது டான்பாஸ் பிராந்தியம் ஆகும். இந்த பிராந்தியத்தில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய 2 முக்கிய பகுதிகள் உள்ளன. இந்த டான்பாசை முற்றிலுமாக கைப்பற்றுவதற்காக ரஷிய படைகள் உக்கிரப்போரில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்று வருகின்றன. இதில் உயிர் பிழைப்பதற்காக அந்த பகுதியில் உள்ள நகரங்களில் வாழ்ந்து வந்த மக்கள் அங்கிருந்து அலை, அலையாக வெளியேறி வருகிறார்கள். 29 மே 2022 6:12 AM உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவது நிலைமையை மேலும் சீர்குலைக்கும் என ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார் 29 மே 2022 5:12 AM உக்ரைன் எதிர் தாக்குதல் செவிரோடொனெட்ஸ்க் நகருக்குள் ரஷிய துருப்புகள் நுழைந்து விட்டன. ஆனால் உக்ரைன் படைகள் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைனில் லைமான் நகரை முற்றிலுமாக ரஷிய படையினர் கைப்பற்றி உள்ளதாக ரஷிய ராணுவ செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷெங்கோவ் தெரிவித்துள்ளார். 29 மே 2022 4:13 AM இரும்பு ஆலையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 2,500 உக்ரைனிய ராணுவ வீரர்களை விடுவிக்க வேண்டும் - பிரான்ஸ், ஜெர்மனி கோரிக்கை உக்ரைனில் அசோவ்ஸ்டால் இரும்பு ஆலையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 2,500 உக்ரைனிய ராணுவ வீரர்களை விடுவிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் ஆகியோர் ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.