சிறுநீரில் இருந்து பீர் தயாரிப்பு - நீர் பாதுகாப்புக்காக புதுமையை புகுத்திய மதுபான நிறுவனம்
28 May,2022
பீர் தயாரிப்பில் புதுமை புகுத்த வேண்டும் என்ற நோக்கில் 'Newbrew' என்ற புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது. இந்த பிரண்டின் பெயர், தோற்றம் மற்றும் ருசியில் புதுமை இல்லை. இதன் தயாரிப்பும் சற்று தனித்துவும் புதுமையும் கொண்டதாகும். இந்த பீர் ஆனது, 'Newater'எனப்படும் நீரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த நீர் கழிவு மற்றும் சிறுநீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட உயர் தரம் வாய்ந்த நீராகும்.
இந்த புதிய பிராண்டின் 95 சதவீத தயாரிப்புகள் இந்த NEWater நீரில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இது சர்தேச பாதுகாப்பு தரத்துடன் கூடியதாகவும், பீர் தயாரிப்பு ஏற்ப தூய்மையானதாகவும் உள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த நீரைக் கொண்டு தயாரிக்கப்படும் பீரில் தேன், பார்லி மால்ட், யீஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. சிங்கப்பூர் நாட்டில் நீண்ட காலமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை எதிர்கொள்ள பல்வேறு யுக்திகளையும், விழிப்புணர்வு செயல்பாடுகளையும் அந்நாட்டின் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.