புட்டின் தோற்றுவிட்டதை உணரத் தொடங்கியுள்ளார் - சர்ச்சை கருத்து வெளியிட்ட பிரபலம்
17 May,2022
உக்ரைன் தலைநகர் கீவை நோக்கி முன்னேறி வந்த ரஷ்ய படைகளை தடுத்து நிறுத்துவதற்காக திறந்து விடப்பட்ட அணையால் இன்றளவும் டெமிடிவ் கிராமம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
போர் ஆரம்பித்த போது, ரஷ்ய படைகளை தடுப்பதற்காக இர்பின் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை உக்ரைன் ராணுவத்தினர் திறந்து விட்டு செயற்கை வெள்ளத்தை ஏற்படுத்தினர்.
கீவ் நகரை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்ட ரஷ்ய படைகள் தற்போது டான்பாஸ் பகுதி நோக்கி தங்கள் கவனத்தை திசை திருப்பின.
2 மாதங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட இந்த வெள்ளத்தால் இன்றளவும் மக்கள் ரப்பர் படகுகளில் பயணித்து வருகின்றனர்
உக்ரைன் போரில் தொடரும் நிலையில் ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் மிகைல் புட்டினை விளாசியுள்ளார்.
அதன்படி புடின் உக்ரைன் போரில் நம்பிக்கையை இழந்து விட்டதாக மிகைல் கஸ்யனோவ் தெரிவித்துள்ளார்.
மிகைல் கஸ்யனோவ் 2000 முதல் 2004 வரை புடினின் முதல் பிரதமராக கஸ்யனோவ் பதவி வகித்தார். அதன்பின், பதவி நீக்கம் செய்யப்பட்ட பின், காஸ்யனோவ் ஒரு எதிர்க்கட்சியை உருவாக்கி 2008 இல் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றார்.
அவர் ஒரு எதிர்ப்பாளராக ஆனார், பின் இப்போது நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்கிறார். அவர் அளித்த பேட்டியில், உக்ரைன் போரில் புடினின் நம்பிக்கை அசைக்கப்பட்டுள்ளது.
போரின் நிலை குறித்து ரஷ்ய அதிபர் அவரது தளபதிகளால் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். புடின் வலிமையான நிலையில் இருந்து பேசவில்லை, சமீபத்திய இராணுவ அணிவகுப்பு உரையின் போது கூட அவர் கொஞ்சம் பதட்டமாக தோன்றினார்.
புடின் இந்தப் போரில் தான் தோற்றுவிட்டதை ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளார் என கூறியுள்ளார்.