ரஷ்ய அதிபருக்கு ரத்த புற்றுநோய்? அமெரிக்க உளவாளி பகீர் தகவல்
16 May,2022
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ரத்த புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அமெரிக்க உளவாளி பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த புற்று நோய் இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் அவரது நோய் குறித்த சரியான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கி தற்போதுவரை தொடரும் உக்ரைன் ரஷ்யா மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சிகிச்சைக்காக தற்காலிகமாக அதிபர் பதவியில் இருந்து விலகியுள்ளார் விளாடிமிர் புடின்.
இதுகுறித்த பிரபல உளவுத் துறை நிபுணர் கிறிஸ்டோபர் ஸ்டீல் கூறுகையில், சமீபத்தில் கிடைத்த தகவல்படி விளாடிமிர் புடின் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கிறிஸ்டோபர் கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் அப்போதைய அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே நட்பு நீடித்ததாகவும் டிரம்புக்கு சாதகமாக தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க புடின் உதவியதாகவும் தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.