உக்ரைனுக்கான 40 பில்லியன் டாலர் நிதிதொகை மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அமெரிக்க மாளிகை எதிர்பார்க்கிறது.
வாக்கெடுப்பு மீதான மசோதாவில் உக்ரைனின் சேவைகள் மற்றும் பாதுகாப்புக்கு உதவ 6 பில்லியனும், அமெரிக்க பங்குகளில் இருந்து இராணுவ உதவியை அனுப்ப அமெரிக்காவை அனுமதிக்கும் 11 பில்லியன் ஜனாதிபதி நிதியுதவியும் அதில் அடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மே 11, 04.05 a.m
அகதிகள் உதவிக்காக 900 மில்லியன் டாலர்கள் சட்டத்திற்குள் கொண்டுவரப்படும் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.
மே 11, 03.51 a.m
ரஷியப் படைகள் உக்ரைனின் அசோவ்ஸ்டாலைத் தொடர்ந்து தாக்குகின்றன.
மரியுபோல் மேயரின் ஆலோசகரான பெட்ரோ வெளியிட்ட வீடியோவில், ரஷிய ராணுவம் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதல்களின் விளைவாக அசோவ்ஸ்டல் ஆலைக்கு மேலே கரும்புகை எழுவதைக் காண முடிந்தது என்றும், ஒவ்வொரு மணி நேரமும் தாக்குதல்கள் நடந்ததாகவும் அவர் கூறினார்.
மே 11, 02.39 a.m
ரஷிய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட மெலிடோபோலில் இருந்து பண்டைய தங்க கலைப்பொருட்களை திருடப்பட்டுள்ளதாகவும் இதனை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவு உக்ரைனின் வக்கீல் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மே 11, 01.20 a.m
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவர் நீலம் மற்றும் மஞ்சள் வண்ண மின் விளக்குளால் ஒளிர வைக்கப்பட்டது.
உக்ரைன் நாட்டின் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிறங்களில் ஒளிர வைக்கப்பட்டது. இதன்மூலம் உக்ரைன் மக்களுக்கு பிரான்ஸ் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
மே 11, 12.45 a.m
ஐரோப்பாவில் 2-ம் உலகப்போருக்கு பின்னர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிற போராக உக்ரைன் போர் மாறி உள்ளது. பிப்ரவரி மாதம் 24-ந் தேதி தொடங்கிய இந்தப்போர் 2 மாதங்களை கடந்து செல்லும் என்று உலக அரங்கில் யாரும் எதிர்பார்க்கவில்லை.
இதுவரை இந்தப் போர் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை இடம் பெயர வைத்துள்ளது என்று ஐ.நா.சபை கூறுகிறது.
இந்த போரில் இதுவரையில் 26 ஆயிரம் ரஷிய படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் சொல்கிறது.
1,170 டாங்குகள், 2,808 கவச வாகனங்கள், 519 பீரங்கி அமைப்புகள், 185 ராக்கெட்டுகள், 87 விமான எதிர்ப்பு அமைப்புகள், 199 விமானங்கள், 158 ஹெலிகாப்டர்கள், 1,980 வாகனங்கள், 12 படகுகள், 380 டிரோன்கள், 94 குரூஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட தளவாடங்களையும் உக்ரைன் தாக்கி அழித்துள்ளதாக, ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.
கருங்கடல் நகரமான ஒடேசா, ரஷிய பேரரசின் ஆபரணமாக திகழ்ந்த காலம் என்று ஒன்று உண்டு. இப்போதோ அது குரங்கு கைகளில் சிக்கிய பூமாலைபோல போரின் பிடியில் சிக்கி தவிக்கிறது.
இந்த நகரை கைப்பற்றுவது ரஷியாவின் மற்றொரு இலக்காக உள்ளது. இந்த நகரில் ரஷிய மொழி பேசும் மக்கள் ஏராளமாக உள்ளனர்.
ஒடேசா நகரத்தின் மீது ரஷிய படைகள் ஒன்றன்பின் ஒன்றாக 7 ஏவுகணைகளை வீசின. இதில் ஒரு வணிக மையம், சரக்கு கிடங்கு பெரும் சேதம் அடைந்தன. ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக ரஷியா அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசியது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடியதாகும். 2 ஆயிரம் கி.மீ. வரை பறந்து சென்று தாக்கக்கூடியதும் ஆகும்.
இந்த ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதற்கிடையே கார்கிவ் நகரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள இஜியம் நகரில் கடந்த மார்ச் மாதம் ரஷியாவின் தாக்குதலுக்கு ஆளாகி பெரும் சேதம் அடைந்த 5 மாடி கட்டிட இடிபாடுகளில் இருந்து அப்பாவி பொதுமக்கள் 44 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மரியுபோல் நகரில் உள்ள அஜோவ் உருக்காலை இன்னும் ரஷியாவின் கைகளில் சிக்கிவிடவில்லை. அந்த ஆலையினுள் 1000 படைவீரர்கள் பதுங்குகுழிகளில் உள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.
அந்த ஆலையை தகர்க்கும் வகையில் ரஷிய படைகள் தீவிரம் காட்டுகின்றன. அங்கு டாங்குகள் ஆதரவுடன் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைன் போரில் இதுவரை அப்பாவி பொதுமக்கள் 3,381 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3,680 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற தகவலை உக்ரைனில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீதான போரில் மிகப்பெரிய வெற்றி அறிவிப்பை வெளியிட முடியாத நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், 2-ம் உலகப்போரில் நாஜிக்களின் ஜெர்மனியை சோவியத் யூனியன் வெற்றி கண்டதன் வெற்றிதின அணிவகுப்பை மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் பார்வையிட்டார்.
வெற்றி தின கொண்டாட்ட விடுமுறையையொட்டி புதின் பெரிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அவ்வாறு ெவளியிட ஏதுமற்ற நிைலயில், உக்ரைனை எதிரியாக சித்தரித்து, போரை நியாயப்படுத்தினார்.
இந்த நிலையில், உக்ரைன் போரில் ரஷியா ரசாயன ஆலைகளை குறி வைக்கக்கூடும் என ராணுவம் எச்சரித்துள்ளது.