ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு தோல்வி ஏற்பட்டால் தாங்க முடியாது என்று நம்புகிறார். அதே வேளையில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான எந்த அறிகுறிகளையும் அவர் காட்டவில்லை என்று ரஷியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் பில் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபரைப் பற்றி அதிகம் அறிந்தவரான, அமெரிக்க உளவுத்துறை(சிஐஏ) இயக்குனராக இருக்கும் பில் பர்ன்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரஷியப் படைகள் கீவை கைப்பற்றத் தவறிய போதிலும், தென்கிழக்கு டான்பாஸ் பகுதியில் முன்னேற அவர்கள் போராடினாலும், உக்ரைனை தனது படைகளால் தோற்கடிக்க முடியும் என்ற தனது பார்வையை ரஷிய அதிபர் இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை.
உக்ரைனில் வெற்றி பெறுவதற்காக அணு ஆயுதங்களை பயன்படுத்த மாஸ்கோ தயாராக இல்லை. ஆனால், இந்த சாத்தியக்கூறுகளை நாம் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது.
போர் எப்படி முடிவடையும் என்று என்னால் கணிக்க முடியாது. தற்போதைய போர்க்கள நிலைமையை என்னால் மதிப்பீடு செய்யவும் முடியாது.
உக்ரேனின் எதிர்ப்பை முறியடிக்கும் ரஷ்ய இராணுவத்தின் திறனில் புதினுக்கு நம்பிக்கை உள்ளது. முக்கிய போர்க்களத்தில் தோல்விகளை சந்தித்தாலும் ரஷ்ய இராணுவத்தின் திறமை மீதான புதினின் நம்பிக்கை இன்னும் அசைக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று காணொலிக்காட்சி வழியாக ‘ஜி-7’ தலைவர்கள் கூட்டம் : ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் பங்கேற்பு
இன்று காணொலிக்காட்சி வழியாக ‘ஜி-7’ தலைவர்கள் கூட்டம் : ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் பங்கேற்பு
(Credits: AP)
Facebook Twitter Mail Text Size Printஇன்று காணொலிக்காட்சி வழியாக ‘ஜி-7’ தலைவர்கள் கூட்டம் : ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் பங்கேற்பு
பதிவு: மே 08, 2022 04:35 AM
கீவ்,
உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று (மே 8) இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
மே 08, 4.00 A.M
இன்று காணொலிக்காட்சி வழியாக ‘ஜி-7’ தலைவர்கள் கூட்டம் : ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் பங்கேற்பு
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் ‘ஜி-7’ அமைப்பில் இணைந்து செயல்படுகின்றன. கூடுதலாக, ஐரோப்பிய யூனியனும் இதில் சேர்ந்து இயங்குகிறது.
இந்த ‘ஜி-7’ அமைப்பின் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காணொலிக் காட்சி வழியாக நடக்கிறது.
இதில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் கலந்து கொள்கிறார் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதையொட்டி வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமையன்று, ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் தலைமையில் காணொலிக்காட்சி வழியாக நடக்கிற ‘ஜி-7’ தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் உக்ரைன் போர் நிலைமை, அதன் உலகளாவிய தாக்கங்கள் உள்ளிட்டவை பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது.
மே 08, 3.00 A.M
அஜோவ் உருக்காலையில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் மீட்பு - உக்ரைன் அதிபர் தகவல்
மரியுபோலில் உள்ள அஜோவ் உருக்கு ஆலையில் இருந்து 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
காயமடைந்தவர்கள் மற்றும் டாக்டர்களை மீட்பதை நோக்கமாகக் கொண்ட இரண்டாம் கட்ட வெளியேற்றத்தில் அதிகாரிகள் கவனம் செலுத்துவார்கள் என்றும், மரியுபோல் மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அனைவருக்கும் மனிதாபிமான தாழ்வாரங்களில் வெளியேற்றப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மே 08, 2.00 A.M
அஜோவ் உருக்காலையில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணி முடிந்தது - ரஷியா
மரியுபோலில் உள்ள அஜோவ் உருக்கு ஆலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கையை நிறைவு பெற்றதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆண்கள், பெண்கள் என மொத்தம் 51 பேர் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருங்கடல் நகரம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் கார்கிவில் இழந்த பகுதிகளை மீட்டது, உக்ரைன்
கீவ்,
கருங்கடல் நகரமான ஒடேசா மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கார்கிவில் இழந்த பகுதிகளில் சிலவற்றை உக்ரைன் படைகள் மீட்டெடுத்தன.
உக்ரைன் போர் தொடர்கதையாய் நீளுகிறது. இந்த நிலையில், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் பின்லேடனின் நினைவுநாளையொட்டி, அதன் தலைவர் அய்மான் அல் ஜவாஹரி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் ரஷிய படையெடுப்புக்கு உக்ரைன் இரையாக காரணம், அதன் நட்பு நாடான அமெரிக்காதான் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
இதற்கிடையே உக்ரைனில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதில் தனது கவலையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளிப்படுத்தி உள்ளது.
15 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உக்ரைன் பிரச்சினையில் அமைதி தீர்வு காண ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தது.
ஆனால் அது குறித்த அறிக்கையில், உக்ரைன் விவகாரத்தில் மோதல், போர் போன்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. மாறாக, ஐ.நா. சாசனத்தின்கீழ், அனைத்து உறுப்புநாடுகளும், அமைதியான வழிகளில் தங்கள் சர்வதேச மோதல்களை தீர்க்கும் கடமையை மேற்கொண்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரஷியா மீதான ஐரோப்பிய யூனியனின் அடுத்த கட்ட பொருளாதார தடைகள் உத்தேச பட்டியலில் அதிபர் புதினின் காதலி அலினா கபேவாவின் பெயரும் இடம் பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே உக்ரைன் போரில் கருங்கடல் துறைமுக நகரான ஒடேசா மீது ரஷிய படைகள் நேற்று தாக்குதலை கட்டவிழ்த்து விட்டன. பல ஏவுகணைகள் அந்த நகரில் தாக்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியே வரவில்லை. நகரத்தில் கரும்புகை எழுந்ததை காட்டும் படங்கள் சமூக ஊடங்களில் வெளியாகின. இந்த நகரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 10-ந் தேதி காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கரை ஒதுங்கும் ரஷிய கப்பல் ஒன்றின் மீது டிரோனில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவ அமைச்சகம் தெரிவித்தது. ஒரு கப்பல் துறையில் அந்த கப்பல் புகை மற்றும் தீயில் மூழ்கிய காட்சிகளை கொண்ட வீடியோ வெளியானது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ‘பைராக்டர் டிபி-2’ டிரோனை பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்ததாக கார்கிவ் பிராந்திய கவர்னர் தெரிவித்தார். தேசிய அருங்காட்சியகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கார்கிவ் நகரை ரஷிய பீரங்கி தாக்குதல் அச்சுறுத்தலில் இருந்து விரைவில் உக்ரைன் விடுவித்து விடும் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த நகரில் ரஷிய படைகளை கடுமையாக உக்ரைன் படைகள் எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன. ரஷிய படைகள் கைப்பற்றிய 5 கிராமங்களை உக்ரைன் படைகள் மீட்டுள்ளன.
ஆனாலும், கார்கிவ் பகுதியில் ரஷிய படைகள் தாக்குதலில் 28 வயதான ஒருவர் பலியானார்.
மரியுபோல் நகரில் ஐ.நா. சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையில், அஜோவ் உருக்காலையில் இருந்து 11 குழந்தைகள் உள்பட மேலும் 50 பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த ஆலையில் இருந்து மீதமுள்ள பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் பாதுகாப்புடன் வெளியேற்றுவதற்கு ராஜ்ய ரீதியில் முயற்சிகள் நடந்து வருவதாக அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதில் செல்வாக்குமிக்க மத்தியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது அங்கு புதிய திருப்பம் ஆகும்.
இத்தனை பரபரப்புக்கு மத்தியில் உக்ரைனுக்கு 150 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,125 கோடி) ராணுவ உதவிகளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.