200KM உள்ளே போய் ரஷ்யாவுக்கு உள்ளே ஊடுருவி அடித்த உக்கிரைன் கோ-வோட் படை !
07 May,2022
ரஷ்ய உக்கிரைன் எல்லையில் இருந்து சுமார் 200KM தொலைவில் உள்ளது “”டெஸரா”” என்னும் நகரம். இது மொஸ்கோவுக்கு அருகில் உள்ளது. இங்கே பெரும் ரசாயன ஆலை ஒன்று உள்ளது. அங்கே தற்போது ரசாயனப் பொருட்கள் உற்பத்திசெய்யப்படுவது இல்லை. ஆனால் அதனை ரஷ்யா ஒரு தளமாக பாவித்து, அங்கிருந்து உக்கிரைனில் உள்ள தனது ராணுவத்திற்கு எரி பொருளை அனுப்பி வருகிறது. சுருக்கமாகச் சொல்லப் போனால், உக்கிரைனில் நிலை கொண்டுள்ள படைகளுக்கு இங்கிருந்தே எரி பொருட்கள் செல்கிறது. இன் நிலையில், அதில் பெரும் வெடிப்பு ஏற்பட்டு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் எரிந்து நாசமாகியுள்ளது. இது தற்செயலாக ஏற்பட்ட விபத்து என்று ரஷ்யா தெரிவித்து இருந்ததுஸ ஆனால்
உக்கிரைனின் ஆழ ஊடுருவும் படை அணி ஒன்று, ரஷ்யாவுக்குள் ஊருவிச் சென்று இந்த வழங்கு தளத்தை தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் ரஷ்யா தாக்கும் போது தற்பாதுகாப்பு சண்டையை மட்டும் செய்து வந்த உக்கிரைன். சில வாரங்களாக எதிர் தாக்குதலிலும் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.