கருங்கடலில் கடற்படை கப்பல்களை குவிக்கும் ரஷ்யா: பிரித்தானியா எச்சரிக்கை!
28 Apr,2022
கருங்கடலில் கிட்டதட்ட 20 கடற்படை கப்பல்களை ரஷ்ய நிலை நிறுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்தில் தகவலில், கருங்கடலில் நடவடிக்கை மண்டலத்தில் நீர்மூழ்கி கப்பல் உட்பட 20 கடற்படை கப்பல்களை ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளது.
துருக்கி போர்க்கப்பல்கள் அல்லாத மற்ற நாட்டு போர்க்கப்பல்களுக்கு பாஸ்பரஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், கருங்கடலில் மூழ்கிய அதன் மாஸ்க்வா போர்க்கப்பலுக்கு மாற்றாக ஒன்றை நிலைநிறுத்த ரஷ்யாவால் முடியவில்லை.
மாஸ்க்வா மற்றும் சரடோவ் கப்பல்களை ரஷ்ய இழந்தாலும், ரஷ்யாவின் கருங்கடல் படை, உக்ரைன் மற்றும் கடலோர இலக்குகளை தாக்கும் வல்லமையை மீண்டும் பெற்றுள்ளதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
கருங்கடலில் இருந்து உக்ரைனை துண்டிக்கும் நோக்கத்தோடு ரஷ்யா செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது, இதன் மூலம் உக்ரைனின் வர்த்தக வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.