ரஷ்யாவுக்கு உள்ளே தாக்குதல் நடத்த உக்கிரைனுக்கு உரிமை உள்ளது- பிரிட்டன் மைச்சர்கள்
26 Apr,2022
இதுவரை காலமும் ரஷ்யா உக்கிரைனை தாக்க, தடுக்கும் முயற்சியிலும் தற்காப்பு முறையிலும் தான் உக்கிரைன் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக ரஷ்ய நிலைகள் மீது உக்கிரைன் கடும் தாக்குதல்களை தொடுத்துள்ளது. 2 தினங்களுக்கு முன்னர் டொன்பாஸ் நகரில் உள்ள முக்கிய வழங்கு தளம் ஒன்றை உக்கிரைன் தாக்கி அழித்துள்ள நிலையில். கிழக்கு கரையில் உள்ள ரஷ்ய எல்லையில் தொடர்ந்தும் பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில். ரஷ்யா உக்கிரைனை தாக்கியுள்ளது. எனவே உக்கிரைன் மீண்டும் ரஷ்யாவுக்கு உள்ளே தாக்குதல் நடத்த அன் நாட்டுக்கு சகல உரிமைகளும் உள்ளதாக,
பிரித்தானிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால் நெடும் தூரம் சென்று இலக்கை தாக்க வல்ல ஏவுகணைகளை பிரித்தானியா இனி உக்கிரைனுக்கு வழங்க உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது மேலும் நிலமையை சிக்கலில் கொண்டு போய் விடும். ரஷ்யாவுக்கு உள்ளே உள்ள தளங்களை உக்கிரைன் தாக்குமேயானால் , அதற்கு கிரிம்பிளின் படைகள்(ரஷ்ய) கடுமையான எதிர் தாக்குதலை நடத்த வாய்ப்புகள் உள்ளது.