பிலிப்பைன்ஸில் கடும் நிலச்சரிவு: 20 மணி நேரம் ஃபிரிட்ஜ்ஜிற்குள் இருந்து உயிர் தப்பிய சிறுவன்
21 Apr,2022
பிலிப்பைன்ஸின் நாட்டில் லேய்ட் மாகாணத்தில் மெகி என்ற பெயரில் வீசிய புயலால் கனமழையும், வெள்ளமும், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள், சாலைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அப்போது பேபே நகரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டபோது அந்த பகுதியில் வசித்து வந்த சிஜே ஜஸ்மே என்ற 11 வயது சிறுவன் நிலச்சரிவு ஏற்பட்டபோது குளிர்சாதன பெட்டிக்குள் ஒளிந்துகொண்டான்.
பின்னர் நிலச்சரிவு பகுதிகளில் மீட்பு பணி நடைபெற்றபோது, அங்கே குளிர்ச்சாத பெட்டி ஒன்று கிடப்பதை வீரர்கள் கண்டறிந்தனர். அதை திறந்து பார்த்தபோது சிறுவன் பத்திரமாக இருந்துள்ளான். சுமார் 20 மனி நேரம் சிறுவன் குளிர்சாதன பெட்டிக்குள் பாதுகாப்பாக இருந்ததாக கூறப்படுகிறது.
சிறுவனை மீட்டபோது, தனது முதல் வார்த்தையாக ‘பசிக்கிறது’ என கூறியுள்ளான். நிலச்சரிவில் அவனது காலில் அடிப்பட்டுள்ள நிலையில் அவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
தற்போது சிறுவன் பத்திரமகா இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலச்சரிவில் சிறுவனின் தாய் மற்றும் இளைய சகோதரன் ஆகியோரை காணவில்லை. சிறுவனின் தந்தை நிலச்சரிவில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு காரணமாக இதுவரை 172 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் படுகாயமடைந்து இருக்கின்றனர். இந்த புயல் காரணமாக அந்த மாகாணத்தைவிட்டு 20 கோடி பேர் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.