ரஷ்யப்படைகளால் எங்கும் முன்னேற முடியவில்லை - யுக்ரேன்
29 Mar,2022
ரஷ்யப்படைகள் மீண்டும் ஒருங்கிணைந்திருப்பதாகவும், ஆனால், யுக்ரேனில் அவர்களால் எங்கும் முன்னேற முடியவில்லை எனவும், யுக்ரேன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மால்யர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷ்யப்படைகள் தாங்கள் ஏற்கெனவே கைப்பற்றியுள்ள பகுதிகளில் தங்களின் நிலையை வலுப்படுத்த முயற்சித்து வருவதாகவும், கீயவை கைப்பற்ற முயற்சிப்பதாகவும், ஆனால், "தலைநகரை கைப்பற்றுவதில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.
"எதிரிப்படைகள் (ரஷ்யப்படைகள்) மீண்டும் ஒருங்கிணைந்துள்ளன, ஆனால், அவர்களால் யுக்ரேனில் எங்கும் முன்னேற முடியவில்லை," என, அவர் தெரிவித்தார்.
அதிகரித்துவரும் இழப்புகளுக்கு மத்தியில், செர்னோபில் வாயிலாக ரஷ்ய ராணுவக் குழுக்கள் பெலாரூஸில் ஒன்றிணைந்துள்ளதாக, யுக்ரேன் ஆயுதப்படை தளபதி முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தலைநகர் கீயவை சுற்றி வளைக்கும் முயற்சிகளை வலுப்படுத்த ரஷ்யப்படைகள் திரும்பலாம் எனவும், அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.