புட்டினை எதிர்த்த 16 பேரும் உயிரோடு இல்லை:
23 Mar,2022
இதுவரை ரஷ்ய அதிபர் புட்டினை எதிர்த்த 16 பேர், விதம் விதமாக கொல்லப்பட்டுள்ளார்கள். சிலரது மரணம் கொலை எனத் தெரியும் ஆனால் யார் செய்தார்கள் என்பது தெரியாது. சிலரது மரணம் இயற்கை போல இருக்கும். ஆனால் அது கொலை என்பது சிலருக்கே தெரியும். மேலும் சில கொலைகள் விபத்து போல இருக்கும். ஆனால் அதுவும் திட்டமிடப்பட்ட கொலைகள் தான். அலெக்ஸாண்டர் என்ற ரஷ்ய நபர், லண்டனில் தஞ்சம் அடைந்து. பிரித்தானிய உளவுப் பிரிவின் காவலில் இருந்த வேளை கூட, பொலோனியம் என்ற கதிர் இயக்க பொருளை உணவில் கலந்து கொடுத்து 14 நாட்களில் கடும் கேன்சர் வரவளைத்து கொலை செய்தார் புட்டின். ரஷ்ய ஊடகவியலாளர் அன்னா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். டெனிஸ் என்னும் பாராளுமன்ற உறுப்பினர். அவர் புட்டினை கடுமையாக சாடி வந்தார், அவரும் கொலை செய்யப்பட்டார். இது போல புட்டினை எதிர்த்த 16 பேரும் உயிரோடு இல்லை. இன்றுஸ
ரஷ்யாவின் எதிர் கட்சி தலைவருக்கு 9 ஆண்டு கால சிறை வழங்கப்பட்டுள்ளது. கேட்டால் சிரிப்பீர்கள். அவர் 3.5 மில்லியன் அமெரிக்க டாலரை களவாடி விட்டாராம். அவர் நடத்தி வந்த அமைப்பு ஒன்றுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை அவர் களவாடி விட்டதாக குற்றம் சுமத்தி. அவரை 9 ஆண்டுகள் சிறையில் அடைத்துள்ளது ரஷ்யா. இது போக அவருக்கு கடந்த வருடம் தான் விமானத்தில் வைத்து காபியில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள். ஆனால் அவர் பிழைத்து விட்டார். தற்போது 9 ஆண்டுகள் சிறை செல்ல வேண்டி உள்ளது. இது தான் இன்றைய ரஷ்யா.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து மூன்றாவது வாரங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில்ஜெலன்ஸ்கி தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, “ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடியாக பேச தயாராக இருக்கிறேன் எனவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பேச்சு வார்த்தை தான் ஒரே வழி என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசுகையில் ரஷ்யாவின் படை எடுப்பை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையின் தோல்வி மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் நோட்டா உறுப்பினராக இருந்தால் இந்த போர் தொடங்கி இருக்காது என நான் நம்புகிறேன். நோட்டா உறுப்பினர்கள் எங்களை கூட்டணியில் பார்க்க தயாராக இருந்தால் அதை உடனடியாக செய்யுங்கள். ஏனென்றால் மக்கள் தினந்தோறும் இறக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.