அலாஸ்காவை திருப்பிக் கொடு இல்லையேல் அணு குண்டுகள் பாவிக்கப்படும்- நேரடியாக மிரட்டும் ரஷ்யா !
16 Mar,2022
1867ம் ஆண்டு ரஷ்யா அலாஸ்கா என்னும் பெரும் மாநிலத்தை அமெரிக்காவுக்கு விலை பேசி விற்றது. இன் நிலையில் அன்று முதன் இன்றுவரை அந்தப் பிராந்தியத்தை அமெரிக்கா தனது ஒரு பாகமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. ஆனால் நேற்றைய தினம்(15) பேசிய ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், அலாஸ்காவை அமெரிக்கா மீண்டும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார். இதனை அமெரிக்கா ஒரு போதும் ஏற்கப் போவது இல்லை. அலாஸ்காவை கைப்பற்ற ரஷ்ய துருப்புகள் முனைந்தால், அமெரிக்கா நிச்சயம் தாக்கும். ஆனால் தமது படைகள் அணு குண்டு தாக்குதல் ஒன்றை நடத்த , இனி அஞ்சப் போவது இல்லை என நேரடியாக TVல் மிரட்டியுள்ளது ரஷ்யா. இதனால் பெரும் சர்சை புதிதாக தோன்றியுள்ளது. தற்போதைய சூழ் நிலையில் 3ம் உலகப் போர் ஒன்று வெடிக்கஸ
பெரும் வாய்ப்புகள் இருப்பதாக பிரித்தானியாவின் முன் நாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நேற்று(15) கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
போர் என்ற பெயரில் இனப்படுகொலை நடத்துவதாக உக்ரைன் தொடர்ந்த வழக்கில் நாளை சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது.
போர் என்ற பெயரில் இனப்படுகொலை நடத்துவதாக உக்ரைன் தொடர்ந்த வழக்கில் நாளை சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் மருத்துவமனை, மக்கள் குடியிருப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பல கட்டிடங்கள் உருகுலைந்தன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் நாள்தோறும் தீவிரம் அடைந்து வருகிறது. உக்ரைனை சுற்றி வளைத்த ரஷ்யா, தற்போது தலைநகர் கீவை நெருங்கி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில், கியேவின் புறநகர்ப் பகுதியில் சண்டை கடுமையாகியுள்ளது.
தலைநகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் பலர் பதுகிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர். ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனிடையே ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த மனு மீதான விசாரணையை ரஷ்யா புறக்கணித்தது. உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் போர் என்ற பெயரில் தங்களது நாட்டுக்குள் புகுந்து ரஷிய படைகள் சட்ட விரோத தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் கூறி உள்ளது. போர் விதிகளை மீறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் உக்ரைன் ரஷ்யா மீது குற்றம்சாட்டியது. உக்ரைனின் மனு மீது சர்வதேச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் நாளை சர்வதேச நீதிமன்றம் ரஷ்ய போர் தொடர்பாக சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளது. அப்போது ரஷ்யாவுக்கு எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது தெரிய வரும். சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒரு நாடு இணங்கவில்லை என்றால், ரஷ்யா வீட்டோ அதிகாரம் கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலிடம் நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது