இன்னும் 14 நாட்களே ரஷ்யாவால் தாக்குப் பிடிக்க முடியும்: அமெரிக்க உளவு நிறுவனம்
15 Mar,2022
இன்றில் இருந்து இன்னும் 14 நாட்களுக்கு தான் ரஷ்ய ராணுவத்தால் உக்கிரைனில் தாக்குப் பிடிக்க முடியும் என்றும். அதன் பின்னர் அவர்களுக்கு வரும் சப்பிளை அனைத்தும் தடைப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா ஏற்கனவே பெரும் பொருளாதாரப் பிரச்சனையில் உள்ளதால். உக்கிரைனில் நிலை கொண்டுள்ள ராணுவத்தை கவனிக்க தேவையான பணத்தை ஒதுக்க முடியாமல் திண்டாடுவதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளது. இதனை பிரித்தானிய செய்திச் சேவையும் தெரிவித்து வருகிறது. இன் நிலையில் தலை நகர் கிவியை இதுவரை ரஷ்ய துருப்புகளால் கைப்பற்ற முடியவில்லை. கடுமையான ஆளில்லா விமான தாக்குதலை உக்கிரைன் ஆரம்பித்துள்ளது. உக்கிரைன் நாட்டின்,
கிரீமியா பகுதியில் இருந்து புறப்பட்ட ராணுவம், நாட்டை அப்படியே ஊடறுத்து முன்னேறி தலை நகர் வரை வரும் என்று எதிர்பார்கப்பட்ட நிலையில். குறித்த ரஷ்ய படைகள் அந்த இடத்தில் இருந்து சுமார் 150 KM தூரம் கூட நகர முடியவில்லை. இன் நிலையில் ரஷ்யா தனது ராணுவத்தை முன்னேற விடாமல் , அப்படியே நிலை கொள்ள வைத்து விட்டு. ஏவுகணையால் பல இடங்களை தாக்கி அழித்து வருகிறது. இந்த குறுந்தூர ஏவுகணைகள் அனைத்துமே மிக மிக விலை உயர்ந்தவை. மேலும் ரஷ்யா போர் விமானங்களும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் ரஷ்யா ஹெலிகளை பாவிப்பதை வெகுவாக குறைத்து விட்டது. காரணம் அமெரிக்கா கொடுத்துள்ள ஸ்ரிங்கர் ஏவுகணைகள் ரஷ்யாவின் பல ஹெலிகளை வீழ்த்தியுள்ளதே காரணம் என்கிறார்கள்