ரஷ்யா உக்ரைன் போரில் பயோ ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற புகார்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான தனது நிலைப்பாட்டை இந்திய அறிவித்துள்ளது.
உக்ரைனில் பயோ ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக ரஷ்யா புகார் வைத்துள்ளது. அமெரிக்க ஆதரவுடன் இங்கு பயோ ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆயுதங்களை வைத்து ரஷ்யாவிற்கு உள்ளே கொடூர நோய்களை பரப்ப திட்டமிட்டு உள்ளனர். அமெரிக்காதான் இந்த பயோ ஆய்வுகூடங்களை நடத்தி வருகிறது என்று ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது.
கடும் கோபத்தில் புதின்.. புலனாய்வு அதிகாரிகளுக்கு வீட்டுச்சிறை! உக்ரைன் போர் தோல்வி? இதுதான் காரணமாகடும் கோபத்தில் புதின்.. புலனாய்வு அதிகாரிகளுக்கு வீட்டுச்சிறை! உக்ரைன் போர் தோல்வி? இதுதான் காரணமா
இங்கு பயோ ஆயுதங்கள் தயாரிப்பதை அமெரிக்கா - உக்ரைன் மறுத்து வருகிறது. ஆனால் இங்கே பயோ ஆய்வுக்கூடங்கள் இருப்பதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பயோ ஆயுதங்கள் பற்றி உடனே விவாதிக்க வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கை விடுத்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இதை பற்றி உடனே ஆலோசனை நடத்த வேண்டும் என்று ரஷ்யா அவசர அழைப்பு விடுத்தது.
இதையடுத்து கடந்த வெள்ளிகிழமை இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்றது. இதில் ரஷ்யா சார்பாக அதன் தூதுவர் வாஸில்லி கலந்து கொண்டார். அவர் பேசியதில், நாங்கள் சில ஷாக்கிங் விஷயங்களை கண்டுபிடித்து. நாங்கள் பிடித்த இடங்களில் பயோ ஆயுதங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. நாங்கள் வருவது தெரிந்து உக்ரைன் படைகள் அவசர அவசரமாக இதை சுத்தம் செய்துவிட்டு சென்ற அடையாளங்கள் உள்ளன.
உக்ரைனில் 30 இடங்களில் ஆய்வகங்கள் மூலம் கொடூரமான ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன, என்று ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த நிலையில் இதே விவாதத்தில் இந்தியாவும் தனது நிலைப்பாட்டை தெரிவித்தது. இதுவரை ஐநா பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐநா கூட்டம் எதிலும் இந்தியா ரஷ்யாவை எதிர்க்கவில்லை. அதே சமயம் உக்ரைனையும் இந்தியா வெளிப்படையாக எதிர்க்கவில்லை.
பேச்சுவார்த்தை மட்டுமே இதற்கு தீர்வு என்று இந்தியா கூறி வந்துள்ளது. இந்த நிலையில் பயோ வெப்பன் தொடர்பான ஆலோசனை கூட்டத்திலும் கூட இந்தியா ரஷ்யாவை, உக்ரைனை எதிர்க்கவில்லை. இந்த கூட்டத்தில் பேசிய இந்தியாவின் நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி, இந்த விஷயம் மிக முக்கியமானது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை என்றாலும் இது சர்வதேச அளவில் முக்கியம் வாய்ந்தது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளை அழைத்து பேச வேண்டும். இரண்டு நாடுகளும் ஒரே மேடையில் அமர்ந்து பேசுவதே இந்த பிரச்னையை தீர்க்க வசதியாக இருக்கும். பயோ ஆயுதங்கள் பற்றிய, புகார்களும், ரஷ்யா - உக்ரைன் போர் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது தொடர்பான புகார்களும் கவலை அளிப்பதாக உள்ளது.
மனித குலத்திற்கு அச்சறுத்தலை, மொத்தமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்த கூடாது. பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும். ராஜாங்க ரீதியான ஆலோசனைகள் மட்டுமே இந்த போருக்கு தீர்வாக இருக்கும். மற்றபடி பயோ ஆயுதங்கள், கடுமையான ஆயுதங்கள் போரை இன்னும் தீவிரமாக்கவே செய்யும் என்று இந்திய தரப்பு கூறியுள்ளது.