உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
சமீபத்தில் ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா அதிரடியாக தடைவிதித்தது. மேலும் பல்வேறு நிறுவனங்களும் ரஷியாவில் தங்களது சேவைகளை நிறுத்தி உள்ளது.
இதனால் ரஷியாவின் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் என்னஆகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யாவிட்டால், மேற்கத்திய நாடுகள் கடுமையாகபாதிக்கும், விலை கடுமையாக உயரும் என்ற அச்சம் நிலவியது. இதனால் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலையும் 140 டாலர் வரை அதிகரித்தது
ஆனால், ஐக்கிய அரபு அமீரகம், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் களமிறங்கி, கச்சா எண்ணெய் தேவையை நிறைவேற்றுவதாகத் தெரிவித்துள்ளன.
இதனால் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளுக்கு கச்சா எண்ணெயால் வரும் சிக்கலும் நீங்கியது.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் தனது நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை குறித்து பேசும் போது ரஷியாவுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதார தடைகள் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்திவிடும்.
இதனால் உலகளவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் என கூறி உள்ளார்.
மேலும் மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி தரும் வகையில் ரஷியாவிலிருந்து 200 வகையான பொருட்களின் ஏற்றுமதியை இந்த ஆண்டுவரை தடை செய்து ரஷிய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த தடையில் எந்திரங்கள், மின்னணு பொருட்கள், கார்கள், உதரிபாகங்கள், உணவுப் பொருட்கள், வேளாண் உபகரணங்கள், மருந்துப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ரயில் எஞ்சின்கள், ரயில் பெட்டிகள், கண்டெய்னர்கள், டர்பைன்கள், உலோகங்கள், விலை உயர்ந்த கற்கள், கட்டிங்எந்திரங்கள், வீடியோ டிஸ்ப்ளே, ப்ரஜெக்டர், கன்சோல், ஸ்விட்போர்டு என 200 வகையான பொருட்கள் இந்த ஆண்டு இறுதிவரை மேற்கு நாடுகளுக்கும்,பிறநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ரஷ்ய அரசு தடை விதி்த்துள்ளது.
ஆனால், யூரோசியா பொருளாதாரக் கூட்டமைப்பில் உள்ள அப்காஜியா, தெற்கு ஆசெட்டியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு வகையான மரங்கள், மரப்பொருட்கள், மரத்தில் செய்யப்பட்ட பெட்டிகள் என எந்த பொருட்களையும் ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.