சிதறும் ரஷ்ய டாங்கிகள்: கொரில்லா தாக்குதலின் உச்சம் !
11 Mar,2022
தலை நகர் கிவியை கைப்பற்ற , ரஷ்ய டாங்கிகள் அணி வகுத்து வருகிறது. ஆனால் சரியான ஒரு இடத்தை அடைந்த உடனே , ஏற்கனவே திட்டமிட்டு இருந்த உக்கிரைன் படைகள் அந்த தெருவை நோக்கி கடும் ஆட்டிலறி தாகுதலை நடத்த, பல ரஷ்ய டாங்கிகள் வெடித்து சிதறுவதோடு, அங்கே நின்றிருந்த 23 ரஷ்ய ராணுவத்தினர் கொல்லப்படும் காட்சிகள் நேரடியாக வெளியாகி உள்ளது. உக்கிரைன் ஆளில்லா விமானங்களை தாயாரிக்கும் ஒரு முன்னணி நாடாக இருக்கிறது. உக்கிரைன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து நடத்தி வந்த பெரும் தொழில் சாலை ஒன்றை ரஷ்யா சமீபத்தில அழித்தது. இதனூடாக உக்கிரைன் இனி ஆளில்லா விமானங்களை தயாரிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது என்று ரஷ்யா கணக்கு போட்டு வைத்திருந்துள்ளது. ஆனால் அது பிழையான விடையம். காரணம் என்னவென்றால். உக்கிரைன் படையினருக்கு பெரும் உதவியாக இருப்பதே இந்த ஆளில்ல்லா விமானங்கள் தான்ஸ அவை துல்லியமாக ரஷ்யஸ
நகர்வுகளை அறிந்து தனது தலமைக்கு வீடியோ மூலம் அனுப்ப, உக்கிரைன் படைகள் குறித்த இடம் நோக்கி கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்கிரைன் நாட்டின் வெறும் 10% விகிதத்தை தான் ரஷ்யாவால் இது வரை காலமும் கைப்பற்ற முடிந்துள்ளது என்பது பெரும் ஆச்சரியமான விடையம். ஆனால் அது தான் உண்மை. பல ஆளில்லா விமானங்களை மணித்தியால கணக்கில் வானில் வைத்திருக்கிறது உக்கிரைன். இதனால் அவர்கள் துல்லியமான தகவலை பெற்று வருகிறார்கள்.