உலகப் பிரபலங்களினதும் செல்வந்தர்களினதும். இரகசிய கணக்குகளைப் பேணி வரும் சுவிஸ் வங்கிகளில் ஒன்றான ‘கிரடிட் சுவிஸ்’ (Credit Suisse) என்ற வங்கியின் சில.
இரகசியத் தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.
இதில் அரபு உலக ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது புலனாய்வுப் பிரிவு பிரதானிகள் கொண்டுள்ள வங்கிக் கணக்குகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
லண்டனில் இருந்து. செயற்படும் இணையயத்தலமாடை மிடில்ஸ ஈஸ்ட்’மொனிடர்’ (Middile East Monitor) இணையத்தளத்தில் ஹாப்பர் என்பவரால். 2022 பெப்ரவரி. 21என்று திகதி. இடப்பட்டு வெளியிட்டுள்ள ஆவணத்தில். ஜோர்தான் மன்னரும் அரசியும் இரகசியமான சுவிஸ் வங்கி கணக்குகளை வைத்துள்ளனர்.
அவற்றில். மில்லியன் கணக்கான டொலர்கள் உள்ளன. அதேபோல் எகிப்தில் பதவி கவிழக்கப்பட்ட ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் புதல்வர்கள், அவது 30 வருட ஆட்சியில் அவருக்கு துணையாக இருந்த அந்த நாட்டின் வர்த்தக ஜாம்பவான்கள்ஸ ஆகியோருக்கும்
அங்கு கணக்குகள் உள்ளை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உங்கள் மத்தியில் இருப்பவர்கள் மிகநவினத்துவமான மேல்வர்க்கம். உலகநிதி ஒழுங்கு முறையோடு இவர்கள் பிகவும் பின்னிப் பிணைந்துள்ளனர்’ என்று அரபு சீர்திருத்த முயற்சிகள் (Arab Reform Initiative) என்ற. அமைப்பின். நிறை வேற்றுப் பணிப்பாளர் நதீம் ஹோ்ரி தெரிவித்துள்ளார்
“அதுவொரு அரசு போல் தெரிகின்றது. அரசு போலவே ஓசையும் தருகின்றது. ஆனால் கடைசியில் ஒரு நாட்டின் சொத்தாக உள்ளது.ஆற்றல் மிக்கபலர் முழுமையான மன்னர்களைப் போல் செயற்படு கின்றனர்.
தமது சொந்த சொத்துக்களைப்போல் இவற்றை வைத்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“வங்கியில் இருந்து கசித்துள்ள தகவல்களின் படி சித்திரவதைகளிலும், ஊழல்களிலும் ஈடுபட்ட நபர்களை வாடிக்கையானர்களாகக் கொண்டு கணக்குகள்
தொடங்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு எதிரான குற்றங்கள் பொது அரங்கில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அந்த கணக்குகள் தொடர்ந்து பேணப்பட்டு வந்துள்ளன.
சுவிஸ் வங்கியின் இரகசிய கணக்குகள் பற்றிய சட்டங்கள் ஒழுக்கக் கேடானவை என்று நான் நம்புகின்றேன்.
நிதி ரீதியான பிரத்தியேகத் தன்மையைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் தமது நாடுகளில் வரி மோசடியில் ஈடுபடும் ஊழல் பேர்வழிகளுக்கு சுவிஸ் வங்கி வழங்கி வருகின்ற வெட்கக் கேடான ஒத்துழைப்பை இதில் காணமுடிகின்றது” என்று அவரது குறிப்பு தொடர்ந்து செல்கின்றது
கசிந்துள்ள வங்கி ஆவணங்களின்படி. எகிப்து மற்றும் வெனிசூலா பிரஜைகள் தான் இந்த வங்கியில் ஆகக் கூடுதலான அளவு கணக்குகளைக் கொண்டுள்ளனர்.
இந்த ஒவ்வொரு நாட்டையும் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கணக்குகளை பேணி வருகின்றனர்.
2011 அரபு வசந்த எழுச்சிக்குப் பின்னர் காலஞ்சென்ற எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மற்றும் அவரது இரண்டு மகன்மார்களான ஆலா மற்றும். கமால் ஆகியோர் அரச நிதியில் இருந்து 125 மில்லியன் எகிப்திய பவுண் (78 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பணத்தை சூறையாடி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
தமது வீடுகளைப் புனரமைப்பு செய்யும் போர்வையில் இந்தப் பணம் சூறையாடப்பட்டிருந்தது.
சகோதரர்கள் இருவருக்கும் தலா நான்கு வருடங்கள் சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டது. அவர்களின் தந்தைக்கு மூன் றாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த நாட்டின் முன்னாள் புலனாய்வுத்துறை தலைவர் ஒமர் சுலைமான் மற்றும் அவரது குடும்பத்தவர்கள் பெயரில் 2007இல் சுவிஸ்வங்கிக் கணக்கில் 56 மில்லியன் டொலர்கள் இருந்தன.
முபாரக் பதவி கவிழ்க்கப்பட்டு அவர் ஆட்சி அதிகாரங்களை இழந்து
ஐந்து வருடங்கள் கழிந்த நிலையிலும் அதாவது 2016 வரை இந்தக் கணக்குகள் நடைமுறையில் இருந்துள்ளன.
ஓமர் சுலைமான்.
“எகிப்தின் சித்திரவதை பிரதானி’ என்ற.பட்டப் பெயரில் அழைக்கப்பட்டவர்தான் ஓமர் சுலைமான்.
அமெரிக்க புலனாய்வு சேவையான சி.ஐ.ஏ. தனக்குத். தேவையான தகவல்களை எகிப்தில். இருந்து பெற்றுக் கொள்ள பயன்படுத்திய பிரதான தொடர்பாளர் இவர் தான்.
அந்தக் காலப்பகுதியில் உலகம் முழுவதும் இருந்து பயங்கரவாதக் குற்றம். சுமத்தி கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளுக்காகவும் சித்திரவதைக்காகவும் எகிப்துக்குத்தான் அனுப்பப்பட்டனர்.
அமெரிக்காவின் தயவைப் பெற்றுக்கொள்வதற்காக தமது சொந்த மக்களையே சித்திரவதை செய்து கொலை செய்யும் பணியை மேற்கொண்டிருந்தது எகிப்து.
சி.ஐ.ஏ.யின் நீண்ட கால தொடர்பாளரும் முன்னாள் ஜனாதிபதி முபாரக்கின் நீண்ட கால புலனாய்வுப் பிரிவு தலைவரும், முபாரக்கின் நெருங்கிய உறவினருமான ஓமர் சுலைமான் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் 2003இல் கூட்டாக ஒரு கணக்கைத் திறந்தனர்.
ஒரு சில ஆண்டுகளில் அந்தக் கணக்கில் 52 மில்லியன் டொலர்கள் குவிந்தன என்று
தற்போது வெளியாகி உள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015இல் அல்ஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் அஸீஸ் புடப்லிகாவுக்கு சொந்தமான கணக்கில் 1.1 பில்லியன் டொலர்கள் இறுதியாகக் காணப்பட்டன.
ஓமானின் ஆட்சியாளர் காலஞ்சென்ற சுல்தான் கபூஸ் பின் செயித் பெயரில் ‘இரண்டு கணக்குகள் உள்ளன.
2003இல் ஒரு கணக்கில் 126 மில்லியன் டொலர்களும் 2015இல் ஒரு கணக்கில் 57 மில்லியன் டொலர்களும் காணப்பட்டன.
கசிந்துள்ள தகவல்களின் படி எவ்வாறு இவர்களுக்கு கணக்குகள் திறக்க வழிய
மைக்கப்பட்டது என்பது தான் பிரதானமான கேள்வியாக முன்னிற்கின்றது.
2017 அறிக்கை ஒன்றின் படி மிகவும் ஆபத்தான ஒரு நாட்டில் இருந்து அரசியல் ரீதியாக அம்பலமான அல்லது ஆயுத விற்பனை போன்ற ஆபத்தான செயற்பாடுகள் மூலம் அம்பலமான வாடிக்கையாளர்கள் என பலர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
2000 முதல் 2005 வரை ஜோர்தானின் புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் சாத் கீர் என்பவர்.
இவரும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் பிரதான பங்காளி.
இவரும் அமெரிக்காவுக்காக பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்தவர் என்று மனித உரிமை அமைப்புக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்.
2003இல் அவரும் கணக்கைத் திறந்துள்ளார். 2009இல் அவர் மரணம் அடைந்த பின் அந்தக் கணக்கு செயல் இழக்கப்படுவதற்குள் அதன் தொகை 21.6 மில்லியன் டொலர் களாக காணப்பட்டுள்ளது.
சி.ஐ.ஏ யின் ஓய்வு பெற்ற சிரேஷ்ட செயற்பாட்டு அதிகாரி டக்ளஸ் லண்டன் என்பவர் இது குறித்து கூறுகையில் ‘புலனாய்வுப் பிரிவு தலைவர்களால் பேணப்பட்டு வந்த கணக்குகளில் இருந்த பணம்
அரசாங்கத்தின் இரகசிய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதும் சாத்’தியமே.
ஆனால் இந்தக் கணக்குகளை வைத்திருந்த நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அவை தமது சொந்தத் தேவைக்காக வைக்கப்பட்டுள்ள பணம் என்றே பிரகடனம் செய்துள்ளனர்’ என்றுதெரிவித்துள்ளார்.
எவ்வாறாமினும் இந்தக் கணக்குகள் பற்றிப் பேசிய முன்னாள் மற்றும் இந்நாள் சுவிஸ் வங்கி ஊழியர்கள், முதலாளிகள்
ஒவ்வொருவரையும் வேறு வழிகளில் கவனிக்குமாறு ஊக்குவித்தனர்.
பெரிய கணக்குகள் ராடார் திரையின் கீழ் வைக்கப்பட்டன. சில சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகளைத் தவிர வேறு எவருக்கும்
இந்தக் கணக்குகள் பற்றி எதுவும் தெரியாது ‘என்று கூறியுள்ளனர்.
வெளிவந்துள்ள இந்தத் தகவல்கள் ஒரு பாரிய பனிப்பாறையின் முனை மட்டுமேஇ மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளின் பரிதாபத்துக்குரிய நிலையும் இதுதான்.