ரஷ்யாவின் 3 முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டு பிடித்த நகரை விட்டு தப்பி ஓடிய ரஷ்ய ராணுவம் !
09 Mar,2022
உக்கிரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரமான சூ- ஹைவை மீண்டும் உக்கிரைன் படைகள் தம்வசம் ஆக்கிக் கொண்டுள்ளார்கள். சில தினங்களுக்கு முன்னர் சூ- ஹை நகரை ரஷ்ய படைகள் பிடித்து தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். ஆனால் நேற்றைய தினம்(07) நடந்த பெரும் போர் ஒன்றில், ரஷ்யாவின் 3 முக்கிய தளபதிகள், சூ- ஹைவை நகரில் கொல்லப்பட்டதை அடுத்து, பல ராங்கிகளை அப்படியே விட்டு விட்டு ரஷ்ய படையினர் ஓட்டம் பிடித்து விட்டார்கள். இவர்கள் பின்வாங்கிச் சென்றுள்ள நிலையில், பல ரஷ்ய டாங்கிகளை உக்கிரைன் படை கைப்பற்றியுள்ளதோடு, மேலும் தகர்க்கப்பட்ட டாங்கிகள் வீடியோக்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். ஏற்கனவே அதிர்வு இணையம் எழுதி இருந்ததுஸ. பல இடங்களைஸ
இலகுவாக கைப்பற்றலாம். ஆனால் தக்க வைப்பது என்பது தான் பெரும் பாடு. அது தான் இங்கே நடந்து வருகிறது. ரஷ்ய ராணுவம் பல இடங்களைப் பிடித்துக் கொண்டு முன்னேறி வருகிறது. ஆனால் பிடித்த இடங்களை மீண்டும் அடித்துப் பிடிக்கிறது உக்கிரைன் ராணுவம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் ரஷ்யா இருக்கிறது. ஆனால் ரஷ்யா இப்படி மெளனமாக இருப்பது , பெரும் தாக்குதல் ஒன்றுக்கு தான். அவர்கள் யுக்தியை யாராலும் கணிக்க முடியாது. அமெரிக்காவால் கணிக்க முடியாது என்று சில ராணுவ ஆய்வாளர்கள் பேசி வருகிறார்கள். உண்மையில் களத்தில் நின்று பார்த்தால் தான் அதன் அருமை புரியும். உக்கிரைன் படைகளை பொறுத்தவரை அவர்கள் பிறந்து வளர்ந்த பூமி அது. ஆனால் ரஷ்ய படைக்கு உக்கிரைன் நாட்டில் ஸ
எதுவும் தெரியாது. ஒரு வரை படத்தை பார்த்து முன்னேறுகிறார்கள். இன் நிலையில் எங்கே என்று பார்த்துக் கொண்டு இருந்து பெரும் கொரில்லா தாக்குதலை நடத்துகிறது உக்கிரைன் ராணுவம். இன் நிலையி ரஷ்யா போரில் பெரும் தோல்வியை அடைந்து விட்டதாக மேற்குலக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள். இதனால் ரஷ்யா எப்படி என்றாலும் தலை நகரைப் பிடித்து விட வேண்டும் . அப்படி என்றால் அதனை ஒரு வெற்றியாக காட்டலாம் என நினைக்கிறது. ஆனால் அதுவும் கை கூடவில்லை. இதுவே யதார்த்த நிலை. ரஷ்யாவிடம் படு பயங்கரமான ஆயுதங்கள் இருக்கிறது. அதனை எல்லாம் இந்தப் போரில் ரஷ்யா பாவிக்கவில்லை. உண்மை தான். ஏன் என்றால் அதனை எல்லாம் பாவிக்க முடியாது. காரணம் அது போன்ற ஒரு ஏவுகணையின் விலையே 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரும். இதனை உக்கிரைன் போரில் பாவித்தால் பின்னர் எவ்வாறு இழந்த ஆயுதங்களை மீண்டும் செய்து படையணியில் இணைப்பது ? அதற்கு பெரும் பணம் தேவை. ஏற்கனவே வங்குரோத்தில் உள்ள ரஷ்யா, இன்னும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் அல்லவா ?