ரஷ்ய விமான நிறுவனங்களின் சேவைகள் நிறுத்தம்ஸ அமெரிக்க நிறுவனம் அறிவிப்புஸ!!
03 Mar,2022
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 7வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் ராணுவத் தளங்கள் பெரும்பாலானவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரேன் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
பொதுமக்களும் வீதிகளில் இறங்கி ஆயுதங்களுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போயிங் என்ற அமெரிக்க விமான நிறுவனம், ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு தெரிவித்து வந்த தங்களின் ஆதரவை நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறது.
இதுபற்றி போயிங் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யாவை சேர்ந்த விமான நிறுவனங்களுக்கு அளித்து வந்த பராமரிப்பு, பாகங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் போன்றவற்றை நிறுத்திக் கொள்கிறோம். போர் தொடர்ந்து கொண்டிருப்பதால், ரஷ்யாவில் இருக்கும் எங்கள் அணியை சேர்ந்த வீரர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் கவனமாக உள்ளோம். மேலும், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் இருக்கும் எங்கள் அலுவலகம் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்