ரஷ்ய காசு 1சதத்திற்கு குறைவாக போனது: இலங்கையை விட கேவலமான நாடாக ரஷ்யா மாறும் நிலை ஸ
02 Mar,2022
கடந்த 25 வருடங்களில் காணாத அளவு வீழ்ச்சியை ரஷ்ய நாணயம் கண்டுள்ளது. ரஷ்யாவின் நாணயமான ரூபிள் 33% சத விகித வீழ்ச்சியை கடந்த 8 நாட்களில் கண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 0.009 சதம்($) மாக மாறியுள்ளது. அதாவது 1 அமெரிக்க டாலரை மாற்றினால், 104 ரூபிள் கிடைக்கும். எனவே அமெரிக்க டாலரோடு ரஷ்ய ரூபிளை ஒப்பிட்டால், ரஷ்யாவின் ரூபிள் 0.009 சதம் தான் பெறுமதி. 10 சதம் கூட இல்லை. அமெரிக்க டாலரில் 1 டாலருக்கும் குறைவான எண்ணிக்கையை சென்ட்(சதம்) என்று கூறுவார்கள். இதனால் ரஷ்யா மிக மிக பஞ்சப்பட்ட நாடாக உருவெடுக்க உள்ளது. இலங்கை போல, வெளிநாட்டு பணம் இல்லாத ஒரு நாடாக மற உள்ளது. காரணம் ஜேர்மனியும் காலை வாரியது. ஜேர்மனி மிகவும் துணிச்சலான ஒரு முடிவை எட்டியுள்ளது. இனி ரஷ்யாவில் இருந்து எண்ணை இறக்குமதி செய்வது இல்லை என்பது தான். இதனால் பில்லியன் கணக்கான யூரோக்களை ரஷ்யா இழக்க உள்ளது. பிரித்தானியாவில் உள்ள RT என்று அழைக்கப்படும் ரஷ்ய தொலைக்காட்சியை பிரித்தானிய அரசு நிறுத்தியுள்ளது. இதனை அடுத்து பிரித்தானிய BBC தொலைக்காட்சியை..
புட்டின் ரஷ்யாவில் தடை செய்வார் என்று எதிர்பார்கப்படுகிறது. இவ்வாறு நாளுக்கு நாள் ரஷ்யா சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் உலக நாடுகள் தடை செய்து வருகிறது. மேலும் பிரிட்டனில் இயங்கி வந்த ஹாலன் & பரட் என்ற மருந்துக் கடையும் ரஷ்ய மில்லியனர் கடை என்று கண்டு பிடித்து. அதில் எந்த பொருட்களையும் வாங்க வேண்டாம் என்று, மீடியாக்கள் பெரும் போர் ஒன்றை தொடுத்துள்ளார்கள். இதனால் பிரித்தானியாவில் இயங்கி வந்த ஹாலன் & பரட் கடைகளை மூடவேண்டிய சூழ் நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் புட்டினுக்கு ஆதரவாக இருந்த பல செல்வந்தர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட ஆரம்பித்து விட்டார்கள். காரணம் ஸ
அவர்களையும் பல நாட்டு அரசாங்கங்கள் குறிவைக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் புட்டினுக்கு அருகில் செல்ல தற்போது ரஷ்ய தொழில் அதிபர்கள் அச்சமடைந்துள்ளார்கள். இதேவேளை ஆப்பிள் நிறுவனமும் தாம் ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இது போக ஷெல் நிறுவனமும் வெளியேறுவதாக அறிவித்துள்ளது.