6 அமெரிக்க ராணுவம் உக்கிரைன் படைகளோடு இணைந்தது 3 பிரிட்டன் 2 இத்தாலி 1 பிரான்ஸ் ராணுவமும் இணைந்தது !
02 Mar,2022
போலந்து நாட்டில் நிலை கொண்டுள்ள அமெரிக்க ராணுவத்தில் 6 பேர் தாமாகவே முன் வந்து, உக்கிரைன் மக்கள் படையில் இணைந்துள்ளதாக பஸ்- பீட் என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் அமெரிக்க படையில் இருந்து விலகி, உக்கிரைன் மக்கள் படையை வழி நடத்தவும், உக்திகளைச் சொல்லிக் கொடுக்கவும் இணைந்துள்ளார்கள். இதேவேளை, நேட்டோ படையில் பயிற்ச்சி பெற்ற மேலும் 3 பிரித்தானிய ராணுவத்தினரும் இந்த மக்கள் படையில் இணைந்துள்ளவேளை, 2 இத்தாலி மற்றும் 1 பிரான்ஸ் ராணுவ வீரர்களும் மக்கள் படையில் இணைந்துள்ளார்கள். பிரித்தானியாவில் இருந்து முன் நாள் ராணுவ வீரர்கள் சிலர் புறப்பட்டு போலந்து சென்றுள்ளார்கள். அவர்கள் போலந்து வழியாக உக்கிரைன் சென்று சண்டையில் ஈடுபட உள்ளதாக, பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. உக்கிரைன் மக்கள் படையில்ஸ வெளிநாட்டவர்கள் இணைய வேண்டும்ஸ சொந்த நிலங்களை காக்கும் படைஸஎன்று..
இதற்கு பெயர் சூட்டியுள்ள உக்கிரைன் ஜனாதிபதி, பலர் வந்து இணையவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அடுத்து பல நாட்டு இளைஞர்கள் இந்த மக்கள் படையில்(சொந்த நிலங்களை பாதுகாக்கும் படை) யில் இணைந்து வருகிறார்கள்.