3M-54 Kalibrஏவுகணையை தான் மக்கள் மீது அடிக்கிறது ரஷ்யா
01 Mar,2022
ரஷ்யா உக்கிரைன் நாட்டை கைப்பற்ற தற்போது பாவிக்கும் ஏவுகணை மிகவும் பயங்கரமானது. 3M-54 Kalibr கலிபர் என்று இதனை அழைப்பார்கள். நோவட்டோன் டிசைன் பீரே என்னும் ரஷ்ய கம்பெனி ஒன்று, 1994ல் இந்த ஏவுகணையை டிசைன் செய்தது. அன்று முதல் இந்த ஏவுகணை 2021ம் ஆண்டு வரை பல மாற்றங்கள் அடைந்து, இறுதியாக குறுந்தூற ஏவுகணையாக இருக்கிறது. மிகவும் சக்திவாய்ந்த இந்த ஏவுகணையில் 1,300KG வெடி பொருள் உள்ளது. அது வெடித்தால் ஒரு ஏரியாவே காலியாகி விடும். அந்த வகையாக குரூஸ் மீசைல்லை தான் ரஷ்யா மக்கள் குடியிருப்பு மீது ஏவி பல கிராமங்களை அழித்து வருகிறது. மக்கள் புறப்பட்டுச் சென்று விட்டதால் மட்டும் தான், உயிரிழப்பு பல தவிர்கப்பட்டுள்ளதே தவிர, ..
மக்கள் இடம் பெயராமல் அப்படியே இருந்திருந்தால், பெரும் ரத்த ஆறு ஓடியிருக்கும். தம் எதிரே இருக்கும் அனைத்து கட்டங்களையும் உடத்துக் கொண்டு தான் ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது. அந்த இடத்தில் நின்று எதிர்த்து சண்டை இடுவது என்பது, இயலாத ஒரு காரியம். இருப்பினும் உக்கிரைன் ராணுவம் மிகுந்த உறுதியோடு அங்கே நின்று போராடி வருகிறது. தற்போது ரஷ்ய ராணுவம் பின்னடைவை சந்தித்துள்ளதால். பெலருஸ் நாட்டு ராணுவமும் ரஷ்ய ராணுவத்திற்கு உதவியாக வந்துள்ளது.
ரஷ்யாவில் 20% விகிதத்தால் வட்டி அதிகரிப்பு: கடும் பாதிப்பில் சிக்கிய ரஷ்யா..மக்கள்
ரஷ்ய அரசு பெரும் பண நெருக்கடியில் சிக்கியுள்ளது. உக்கிரைன் மீது போர் தொடுத்து பெரும் பணத்தை ரஷ்யா இழந்துள்ள அதேவேளை. உலக நாடுகள் பல ரஷ்யாவோடு இருந்த உறவை முறித்துள்ளது. இதுவரை 36 நாடுகள், பெரும் பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளது. இதன் காரணத்தால் ரஷ்யாவில் உள்ள மத்திய வங்கி, வட்டி விகிதத்தை 20% உயர்த்தியுள்ளது. இதனை அடுத்து பெரும் வரிகளை மக்கள் தலையில் கட்டியுள்ளது ரஷ்ய அரசு. ரஷ்ய அரசு சில வேளைகளில் தமது பணத்தில் கை வைக்க கூடும் என்று, அஞ்சும் மக்கள். சேமிப்பில் போட்டு வைத்திருந்த பணத்தை வங்கியில் இருந்து எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால்ஸ
ரஷ்ய ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு முன்பாக பெரும் மக்கள் கூட்டம் உள்ளது. இது இவ்வாறு இருக்க ரஷ்ய மத்திய வங்கியோடு அனைத்து உறவுகளை அமெரிக்கா முறித்துக் கொண்டுள்ளது. இதுவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.