ஐரோப்பிய யூனியன் கவுன்சிலில் இருந்து ரஷியா இடைநீக்கம்
25 Feb,2022
உக்ரைன் மீதான ரஷிய ஆக்ரமிப்பு ஐரோப்பிய கண்டத்தில் அமைதியை குலைத்து விட்டதாக நேட்டோ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷிய ஆக்ரமிப்பு ஐரோப்பிய கண்டத்தில் அமைதியை குலைத்து விட்டதாக நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ்
பிரஸ்ஸல்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் மீது நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட இந்த படையெடுப்பிற்கு மாஸ்கோ முழுப் பொறுப்பையும் ஏற்கிறது என்று கூறினார், ராணுவ நடவடிக்கையை ரஷியா உடனடியாக நிறுத்துமாறு நேட்டோ உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்நிலையில், உக்ரைன் மீதான ராணுவ தாக்குதல் காரணமாக ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இருந்து ரஷியா இடைநீக்கம் செய்யப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், எனினும் இது தற்காலிகமான ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்டாலும் ரஷியாவுடன் தகவல் தொடர்பு வழிகளை மூடப்படாது என்றும் ஐரோப்பிய யூனியன் கவுன்சில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.