உக்கிரைன் கார் குண்டு வெடிப்பு என பயந்த ரஷ்யா !
19 Feb,2022
உக்கிரைன் நாட்டில் உள்ள எல்லையில், உக்கிரைன் பிரிவினைவாதிகள் எரிவாயு செல்லும் பைப்பை வெடிக்க வைத்துள்ளார்கள். பெரும் சத்தத்துடன் வெடித்து எரிந்த அந்த எரிவாயு பைப் தொடர்பாக தவறான தகவல் வெளியானது. அது என்னவென்றால் உக்கிரைன் நாட்டவர்கள் ரஷ்யாவுக்குள் வெடிகுண்டு நிரப்பிய கார்களை கொண்டு வந்து வெடிக்க வைக்கிறார்கள் என்பது தான். உண்மையில் சிறிய கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆனால் ரஷ்யா சொல்வது போல தொடர் வெடிகுண்டு தாக்குதல் அது அல்ல. இதனை அடுத்து உக்கிரைன் ரஷ்ய எல்லையில் வசிக்கும் சுமார் 7 லட்சம் ரஷ்ய பொதுமக்களை ரஷ்யா உடனடியாக அவ்விடத்தை விட்டு செல்லுமாறு பணிக்கவே. இரவோடு இரவாக ரஷ்ய பொதுமக்கள் அங்கிருந்து அகன்றுள்ள நிலையில், தான்ஸ இது ..
உக்கிரைன் நாட்டு பிரிவினைவாதக் குழு ஒன்று செய்த செயல் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இந்த பிரிவினைவாதக் குழுக்களுக்கு ரஷ்யா தான் ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதனூடாகவே ரஷ்யா இது நாள் வரை உக்கிரைனுக்கு பெரும் குடைச்சலை கொடுத்து வந்தது. ஆனால் இன்று தன் வினை தன்னைச் சுடும் என்று என்பது போல இந்த விடையம் நடந்துள்ளது. எல்லையில் பெரும் சத்தத்தோடு தொடர்ந்து வெடித்து வெடித்து எரிந்து வருவது, எரிவாயு பைப் என்கிறார்கள். ஆனால் உண்மை நிலையை இதுவரை எவராலும் கண்டறிய முடியவில்லை