உக்ரைன் போர் பதற்றம்; ராணுவத்தை திரும்ப பெற்றதாக ரஷ்யா தகவல்!
15 Feb,2022
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ள நிலையில் தங்கள் படையை திரும்ப பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை திரட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உக்ரைனில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை திரும்ப வருமாறு அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் சிலர் மீண்டும் முகாம் திரும்பியுள்ளதாக ரஷ்யா செய்தி வெளியிட்டுள்ளது.