சீனாவுக்கு எதிராக சாலமன் தீவுகளின் தூதரகத்தை மீண்டும் திறக்க அமெரிக்கா முடிவு!
14 Feb,2022
சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான சாலமன் தீவுகளில் தூதரகத்தை மீண்டும் நிறுவப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
பிஜியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் அண்டனி பிளிங்கன் இந்த முடிவை அறிவித்தார்.
சீனா “ஆக்ரோஷமாக” அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களை சாலமன்ஸில் ஈடுபடுத்த முயல்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனேவ அதன் நடவடிக்கைகள் உண்மையாக கவலைகளை ஏற்படுத்துகின்றது என அமெரிக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
1993 இல் சாலமன் தீவுகளில் இருந்த தூதரகத்தை மூடிய அமெரிக்கா, அந்நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் சீனாவுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.