ஆஸ்திரேலியா எல்லைகள் முழுமையாக திறக்கும் தேதியை அறிவித்தார் பிரதமர் ஸ்காட் மோரிசன்
07 Feb,2022
சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதேபோல், ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் எல்லைகள் முழுமையாக மூடப்பட்டன.
பிறகு, ஆஸ்திரேலியா குடிமக்கள், புலம்பெயர்ந்தவர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டன.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் வகையில் நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் வகையில் ஆஸ்திரேலியா எல்லைகள் முழுமையாக திறக்கப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.